பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/57

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இக்காலம்

43


திரவிட ஆய்வுக்கல்வி (3ஆம் பாகம்)

அனவரத விநாயம் பிள்ளையின் Dravidic Studies (Part III) என்னும் ஆங்கிலப் பொத்தகம், பிராகிருதத்தினின்று தமிழ் திரிந்ததாகக் காட்டுவதாலும், காலஞ்சென்ற சுநீதிகுமார சட்டர்சியின் தமிழ்பற்றிய செவ்வையான கருத்தைக் கெடுத்ததானாலும், முற்றும் புறக்கணிக்கப்படத்தக்கதாம்.

(4) S. வையாபுரிப்பிள்ளையின் வழுவாராய்ச்சி

முண்டாமொழியும் திரவிடமும் சமற்கிருதமுஞ் சேர்ந்து தமிழ் தோன்றிற்று.

தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு. அதற்கு மூலநூல்கள் பாணினீயம், பதஞ்சலி மாபாடியம், கௌடிலீய அர்த்த சாத்திரம், மனுதரும் சாத்திரம், பரத நாட்டிய சாத்திரம், வாத்சாயனரின் காமசூத்திரம் என்பன. மரபியலிலுள்ள அறுவகை உயிரினப் பகுப்பு சமணர் ஆராய்ச்சி. ஐந்திரம் என்பது ஓர் இலக்கண முறையே யன்றி நூலன்று.

உண்மையான தமிழ்க்கழகக் காலம் கி.பி. 2ஆம் 3ஆம் கி.பி.2ஆம் நூற்றாண்டுகளாகும்.

வச்சிரநந்தி சங்கம் கி. பி. 470-ல் தோன்றிற்று. அதன் முதல் வெளியீடு திருக்குறளாயிருக்கலாம். திருவள்ளுவர் காலம் தோரா. கி.பி. 600. அவர் சமணர். சிலப்பதிகார மணிமேகலைக் காலம் தோரா. கி.பி. 800. திருக்குறளும் மனுதரும சாத்திரம், கௌடிலியர் அர்த்த சாத்திரம், காமாந்தகர் நீதிசாரம், ஆயுர் வேத நூல்கள், காமசூத்திரம் முதலிய சமற்கிருத நூல்கட்குப் பெரிதும் கடம்பட் டுள்ளது. அதிற் பல வடசொற்கள் உள்ளன.

தமிழெழுத்து பிராமியினின்று திரிந்தது. இக் கூற்றுகள் வையாபுரிப்பிள்ளையின் ஆராய்ச்சி முடிபுகள். அவர் எழுதிய நூல்கள் :-

(1) தமிழ்ச்சுடர்மணிகள்

(2) காவ்ய காலம்

(3) உதயம் (2 மடலம்)

(4) தமிழர் பண்பாடு

(5) இலக்கிய மணிமாலை

(6) தமிழின் மறுமலர்ச்சி

(7) கம்பன் காவியம்

(8) இலக்கியச் சிந்தனைகள்

(9) இலக்கணச் சிந்தனைகள்

(10) சொற்கலை விருந்து

(11) சொற்களின் சரிதம்

(12) திரவிடமொழிகள் ஆராய்ச்சி

(13) சிறுகதை மஞ்சரி

(14) இலக்கிய தீபம்

இவையனைத்தும் மெய்யும் பொய்யுங் கலந்து மாணவரை மயக்கிக் கெடுக்கும் நச்சு வெளியீடுகள். கால்டுவெல் ஐயர் தமிழின்