பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/59

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இக்காலம்

45


 தமிழ்ப்புலவர் எம்மொழியரா யிருப்பினும் தமிழ்ப்பற்று டையராயின், தமிழெழுத்திலேயே தம் பெயரைக் குறிப்பர். இராமானுசக் கவிராயரை நோக்குக. வேங்கடராசு ரெட்டியார் தம் பதவியையும் பெயரையும்,

சென்னைச் சருவகலாசாலை ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட் யூட் தமிழ் ஜூனியர் லெக்சரர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் என்று குறிப்பதே வழக்கம். வரலாற்றொடு கூடிய மொழிநூலாராய்ச்சியின்மையால், அவர் தமிழின் முன்மை முதன்மைகளை உணர்ந்திலர். ஆதலால், அவர் எழுதிய இலக்கணக் கட்டுரைகள், திராவிட மொழியின் மூவிடப் பெயர் என்னுங் கட்டுரைத் தொகுதிகள் தமிழுக்கு மாறானவையே. ஒற்றைக் கண்ணணுக்கு ஓரக் கண்ணன் உதவினது போல, வடமொழிப் பித்தருக்கு வையாபுரியார் புனைந்துரை வழங்கியிருப்பது இயற்கையே.

(7) பர். (Dr) ஆ. ஆந்திரனோவ் இக்காலச் செந்தமிழ் அளவை யிலக்கணம் (A Standard Grammar of Modern and Classical Tamil, by Dr. M. Andronov)-மொழிபெயர்ப்பு

பெயர்ச்சொற்களின் அடிகளும் (bases) வேற்றுமையும்

அடி எழுவாய் பிறவேற்றுமை

அளவ் அளவு அளவை

காத் காது காதை

அடி எழுவாய் வேற்றுமையடி பிறவேற்றுமை

வீட் வீடு வீட்ட் வீட்டை

ஆற் ஆறு ஆற்ற் ஆற்றை

இக்கால இலக்கியநடை

மாடுக்குத் தவிடைப் போடு. (ஏ. பி. நாகராஜன் 'மக்களைப் பெற்ற மகராசி', ப. 11)

அவள் செய்த தவறைத் தன் மாமனிடம் சொல்லிக் கொண்டே போனாள். (ராஜவேலு ‘தங்கசுரங்கம்' ப.18)

வினைவேர்களும் பெயரெச்சங்களும்

வினை வேர் இ. கா. பெயரெச்சம்

விடு விட் விட் + த் + அ = விட்ட

பெறு பெற் பெற் + த் + அ = பெற்ற