பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழ் இலக்கிய வரலாறு



தென்னாட்டுப் புடைமொழி (Southern dialect)

வினைமுதனிலை இ. கா. நி.கா. எ.கா.

சொல் சொன்னிக சொல்லுதிய சொல்விக - முன்னிலைப் பன்மை வினைமுற்று

பார் பாத்தேள் பாக்கிறியள் பாப்பிக

இங்ஙனம் எழுதப்பட்ட இலக்கண நூலிற்கு, வங்கச் சுநீதி குமார சட்டர்சி முகவுரையும், பர். தெ.பொ.மீ. அணிந்துரையும், வழங்கியிருக்கின்றனர். அதனால், இதன் வெளியீட்டாளர்க்குத் தமிழ்நாட்டு அரசுத் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஈராயிரம் உருபா பரிசு வழங்கியிருக்கின்றது.

(8) பர். (Dr) மு.வ. தமிழ் இலக்கிய வரலாறு

"பழைய தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்ட போது, கேரளாவைச் சேர்ந்த திருவிதாங்கூர்த் தமிழ்ப் புலவர் ஒருவர் தலைவராக இருந்தார்.” (ப. 3)

“வடமொழி இலக்கிய வளர்ச்சிபெற்ற காலத்திலேயே தமிழும் இலக்கிய வளர்ச்சி பெற்று விளங்கியது.” (ப.9)

"பிற்காலத்தில் (கி.பி.4, 5ஆம் நூற்றாண்டில்) சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் தமிழ்நாட்டில் சங்கம் ஏற்படுத்திக் கல்வித்தொண்டும் சமயத் தொண்டும் புரிந்தார்கள். அவர்களின் காலத்துச் சங்கங்கள் போலவே, அதற்கு முந்திய காலத்திலும் புலவர்களின் சங்கங்கள் இருந்திருக்க வேண்டும் என்றும், பழைய பாட்டுகள் (எட்டுத்தொகை பத்துப்பாட்டின் பாட்டுகள் முதலியவை) அந்தச் சங்கங்களைச் சார்ந்த புலவர்களால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், அறிஞர்கள் கருதினர்." (ப. 27)

இக் கூற்றுகள் தமிழின் முன்மைக்கும் முதன்மைக்கும் ஏற்றவையல்ல. இனச்சார்பினால் இவை நேர்ந்திருக்கலாம்.


“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.” (குறள். 462)

(9) பர். தெ.பொ.மீ.தமிழுக்குச் செய்த தீங்கு

பர். தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் வையாபுரியாரைப் போன்றே பெரும்புலவர்; அவரைப்போன்றே மொழிக் கொள்கையர். அதனால், அவருக்குப் பின் அவர் பணிக்குப் பூனாப்பட்டக் கல்விப் பின்னைப் படிப்பாராய்ச்சிக் கல்லூரி முதல்வர் பர். கத்திரேயால் அமர்த்தப்பட்டார்.