பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

51




கிழக்கிலும் மேற்கிலும் வழங்கும் இடப்பெயர்களின் வடிவொப்புமையையே இலாகோவாரி கண்டார்; அவற்றின் வேர்ச் சொற்களையும் அவற்றின் அடிப்படைப் பொருளையும் உணர்ந்திலர்.

எ-டு:mal, mala, mall என்னும் பாசுக்கு(Basque) மொழிச் சொற்கள், மலை யென்னும் தமிழ்ச்சொல்லின் திரிபே. மல் = வளம். மல்- மல்லம் = வளம். “மல்லல் வளனே". (தொல். உரி. 7). மல்- மலை = ஆண்டு முழுதும் வளமுள்ள முழுதும் வளமுள்ள இடம்.

”அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்

வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே.”
(நன். பாயி.28)

மக்கள் குமரிநாட்டினின்றே பலதிசையும் பரவிச் சென்றனர் என்பதை, இராமச்சந்திர தீட்சிதரின் Origin and Spread of the Tamils என்னும் நூலிற் காண்க.

முதற்கால மக்கள் நீள்மண்டையராகவே (Dolichocephalic) இருந்தனர். அதனால், நண்ணிலக் கடற்கரை நாடுகட்குக் குடிபோன மாந்தர், மண்டை வகையில் குமரிநாட்டுத் தமிழரை ஒத்திருந்தனர். அகல் மண்டையரும் கழியகல் மண்டையரும் பிற்காலத்தவராவர்.

கற்கால நாகரிகத்தில், பெருங்கற் கட்டட முறை முன்னும் சிறுகற் கட்டட முறை பின்னும் தோன்றுவதே இயற்கை.

ஊர் என்னுங் குடியிருப்பு முதன்முதல் தோன்றியது குமரிநாட்டு மருதநிலத்திலேயே என்பதை, அறிதல் வேண்டும். ஐந்திணை மயக்கம் ஏற்பட்ட பின்னரே, ஏனை நால்நிலத்துக் குடியிருப்புகளும் ஊர் என்னும் பொதுப்பெயர் பெற்றன. அதற்கு முன் பாடி, சேரி, என்பன முல்லை நிலத்திலும், குறிச்சி, சிறுகுடி என்பன குறிஞ்சிநிலத்திலும்; நத்தம், குடிக்காடு என்பன என்பன பாலை நிலத்திலும், துறை, குப்பம், என்பன நெய்தல் நிலத்திலும் வழங்கிய குடியிருப்புப் பெயர்களாகும்.

உல்லுதல் கூடுதல். உல்-உர்(உறு) பொருந்துதல், கூடுதல். ஊர் = மக்கள் நிலைத்து வாழுங் குடியிருப்பு.

குமரிநாடு முழுகிப் போனதினால், தமிழரின் முதற்கால வரலாற்றிற்குத் தொல்பொருட் கலை துணை செய்யாது என்பதை, வரலாற்றாசிரியரும், தொல்பொருட்டுறையரும் அறிதல் வேண்டும்.