பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2

எதிர்காலம்

1. தமிழின் தலைமை

தமிழ், திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான உலக முதல் உயர்தனிச் செம்மொழி. அதன் வளர்ச்சி நிலைகள், முழைத்தல் மொழி, இழைத்தல் மொழி என இரண்டு.

(1) முழைத்தல் மொழி அல்லது இயற்கை மொழி-Natural Language or Rudimentary Speech

விளியொலிக் கிளவிகள் - எ-டு: ஏ, ஏய், ஏல், ஏல, எல்லா

ஒப்பொலிக் கிளவிகள் - எ-டு: காகம், குரங்கு,மாடு, விக்கு

உணர்ச்சியொலிக் கிளவிகள் - எ-டு: ஆ, ஆவா-ஆகா, எல்லே

குறிப்பொலிக் கிளவிகள் - எ-டு: ஊம், சீ, சே, சை, பூ

வாய்ச்செய்கையொலிக் கிளவிகள் - எ-டு: ஊது, துப்பு, கவ்வு, அங்கா

குழவி வளர்ப்பொலிக் கிளவிகள் - எ-டு: டு: இங்கா, லாலா, லோலோ

சுட்டொலிக் கிளவிகள் - எ-டு: ஆ, ஈ, ஊ


(2) இழைத்தல் மொழி அல்லது வளர்ச்சி மொழி - Developed Language or Articulate Speech

இழைத்தல் மொழிச்சொற்கள் பெரும்பாலும் முச் சுட்டொலிகளினின்றே, அவற்றுள்ளும் சிறப்பாக உகரச் சுட்டினின்றே, தோன்றியுள்ளன.

சேய்மையைச் சுட்டுவதற்கு விரிவாக வாயைத் திறக்கும் போது ஆகார அகரமே ஒலித்தற் கியலுதலும், அண்மையைச் சுட்டுவதற்கு வாயிதழைப் பின்னோக்கி இழுக்கும்போது ஈகார இகரமே ஒலித்தற் கியலுதலும், முன்மையைச் சுட்டுவதற்கு வாயிதழைக் குவிக்கும் போது ஊகார உகரமே ஒலித்தற்கியலுதலும், ஒலித்துக் காண்க. இங்ஙனம் ஆ ஈ ஊ அல்லது அ இ உ என்னும் மூவுயிரெழுத்துகளும், வாய்ச் செய்கை யுதவியால், கையினாற் கட்டுவது போன்றே சேய்மை-