பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/70

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

56

தமிழ் இலக்கிய வரலாறு


 (7) பல்தொகுநிலை - (Polysynthetic Stage)

(8) பிரிநிலை - (Analytical Stage)

என எண்வகைப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்கரும் ஆத்திரேலியரும் சீனரும், அசை நிலைக் காலத்தில் குமரிநாட்டினின்று பிரிந்து போனதாகத் தெரிகின்றது.

துரேனியர் அல்லது சித்தியர் எனப்படும் மக்கள், கொளுவு நிலைக் காலத்திற் பிரிந்து போயிருக்கலாம்.

அவருக்குச் சற்றே பிற்பட்ட தமிழருள் ஒருசாரார் வடக்கே சென்று பிராகிருதராக மாறினர். அவருக்குப் பிற்பட்டவர் திரவிடராகத் திரிந்தனர்.

பிராகிருதருந் திரவிடருங் கலந்த வகுப்பார் ஒருசாரார் வடமேற்காகச் சென்று ஐரோப்பாவில் ஆரியராக மாறினர். அவருள் ஒரு பிரிவினரே இந்தியாவிற்குட் புகுந்து வேத ஆரியராயினர்.

ஆரியன் என்ற பெயர் தோன்றியது இந்திய நிலத்திலேயே. ஐரோப்பியரை ஆரியர் என்றது மொழியினம்பற்றியே.

ஆரி=மேன்மை. ஆரியன்=மேலோன். இத் தென் சொல்லையே ஆரியர் தங்கட்கு இட்டுக்கொண்டனர். இந்திய வரலாற்று நூலில், ஆரியர் என்பது, பூசகரோடு கூடிய ஆரிய ஆயர் கூட்டத்தையே, குறிக்குமேனும், தமிழாரியப் போராட்டத்தில் ஆரியர் என்பது, ஆரியப் பூசாரியரையே என்பதை அறிதல் வேண்டும்.

ஐரோப்பா சென்று ஆரியராக மாறிய பிராகிருதத் திரவிடர், முதற்கண் காண்டினேவியம் (Scandinavia) சென்று தங்கியதனால், அதையடுத்த தியூத்தானிய மொழி தமிழுக்குச் சற்று நெருங்கியதாகவும், அதற்குத் தெற்கிலுள்ள இலத்தீனம் அதினுஞ் சற்று விலகியதாகவும், அதற்குத் தென்கிழக்கிலுள்ள கிரேக்கம் மிக விலகினதாகவும், இந்தியா வந்த ஆரியம் மிகமிக விலகினதாகவும், உள்ளன.

தமிழ் தியூத் தானியம் இலத்தீனம் கிரேக்கம் இந்திய ஆரியம்

உகை-அகை -- அகோ(ago) அகோ (ago) அஜ்

இதோள் ஹிதெர் சித்ர (citra) -- அத்ர

காண் கன், கான், கென், கேன். (cun con, ken,can), க்னோ(know) க்னோ(gno) க்னோ (gno) ஜ்ஞா