பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/71

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எதிர்காலம்

57


 கும் - கும் சும் ஸம்

பொறு பெர்,பேர் (ber, bear) ப்வெர் (fer) பெர் (pher) ப்ரு, பர் (bhr, bhar)

விடலை வெலெ விதுல இதலொஸ் வத்ஸ

வடமொழியின் ஐந்நிலைகளில் தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளன. அவையாவன :

(1) வடுகநிலை, (2) ஐரோப்பிய நிலை, (3) பிராகிருத நிலை, (4) வேத நிலை, (5) சமற்கிருத நிலை.

இவ் வைந்நிலைகளிலும் கலந்துள்ள தென்சொற்கள் வடமொழியில் ஐந்திலிரு பகுதியாகும். தமிழ்த்துணையின்றி வடமொழி இயங்க இயலாது. வடமொழி தேவமொழியென்று கூறி, தென்சொற்கட்கெல்லாம் பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும், வலிந்தும் நலிந்தும் பொருளும் பொருட் காரணமுங் கூறும் வழக்கம், இனிப் பயன்படாது. அதை அடியோடு விட்டுவிடல் வேண்டும்.

பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ் தலைமையாகவும் (Main) வடமொழி கீழ்த்துணையாகவும் (Subsidiary) இருத்தல் வேண்டும். பொதுத் திருக்கோவில் வழிபாடெல்லாம் தமிழிலேயே நடைபெறல் வேண்டும். பிராமணரே தமிழ் வழிபாட்டை நடத்தி வைக்கலாம். பிராமணக் குடியிருப்புகளிற் பிராமணருக்கென்று கட்டிய கோவில்களில் சமற்கிருத வழிபாடு நடத்திக் கொள்ளலாம்.

முதலமைச்சர், கல்வியமைச்சர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், தமிழ்த்துறைத் தலைவர், கல்வித்துறை இயக்குநர்கள், கல்வி நிலையங்களில் தமிழாசிரியன்மார், வரலாற்றுத்துறை தொல் பொருட்டுறை ஆசிரியரும் ஆராய்ச்சியாளரும் தலைவரும், ஆகிய அனைவர் பதவிகட்கும், பர். சி. பாலசுப்பிரமணியம், பர். ஒளவை து. நடராசன். பர். ச. வே. சுப்பிரமணியம், புலவர் ஆ. முத்துராமலிங்கம் போன்றோரே அமர்த்தப் பெறல் வேண்டும். பரிதிமாற் கலைஞன் போன்றவராயின் பிராமணரும் அமர்த்தப் பெறலாம்.

ஆங்கிலப்பட்டம் பெற்ற பிற பாட ஆசிரியர்க்குரிய சம்பளமே, புரலவர் பட்டம் பெற்ற தமிழாசிரியர்க்கும் அளிக்கப்படல் வேண்டும்.

ஆராய்ச்சிப்பட்டங்கட்கும் இடுநூல்களைத் (Thesis) தமிழிலும் எழுதி விடுக்க, அரசும் பல்கலைக்கழகங்களும் இசைவு தரல் வேண்டும்.

எவ்வகையிலும் தமிழுக்குத் தாழ்விருத்தல் கூடாது.