பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தமிழ் இலக்கிய வரலாறு




பேராயத் தமிழர் வரலாறறியாமையாலும் தம் திரிபுணர்ச்சியாலும், தாமே விடுதலை மறவரென்றும், நயன்மை அல்லது நேர்பாட்டுக் கட்சியர் (Justice partymen) அடிமையரென்றும், கூறுவர். உண்மையில், முன்னவரே அடிமையரும் தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுப்ப வருமாவர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், பின்னவரே உண்மையான நாட்டுப்பற்றாளரும் உரிமையுணர்ச்சியரும் விடுதலை மறவருமாவர். பேராயத் தமிழர் இன்றும் தம் அடிமைத்தனத்தை உணர்வதில்லை. அது இன்னும் மிகக் கேடானதாகும். கொடிய நோயாளி ஒருவன் தன் நோயை அறியாதிருப்பின், அது மிகக் கொடிய நிலைமையே யாகும்.

3. தமிழரும் பிராமணரும் ஒத்து வாழ்தல்

ஆரியர் இந்தியாவிற்குட் புகுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, தமிழர்க்கு முழு வளர்ச்சியடைந்த மெய்ப்பொரு ளறிவு மிக்க இரு மதமும் இருந்தன. அவருக்குப் புதுமொழியும் மதமும் இம்மியும் தேவையில்லை. ஆயின், தமிழரொடு தொடர்பு கொண்டபின் பிராமணர் எனப் பெயர் பூண்ட ஆரியப் பூசாரியர், பழந்தமிழ் மக்களின் மதப்பித்தத்தையும் கொடைமடத்தையும் ஏமாளித்தனத்தையும் கண்டு, அவரை என்றைக்கும் அடிப்படுத்தி யாள எண்ணங் கொண்டு, “உரோமை நகரிலிருக்கும்போது உரோமையர் போல் நடந்துகொள்.” (“When you are at Rome do as Rome does.”) என்னும் பழமொழிக்கு மாறாக, தமிழரையே தம் விருப்பப்படி நடக்கச் செய்துவிட்டனர். அதற்கு அவர் வகுத்த திட்டங்கள், தமிழரைத் தாழ்த்துவதும் அவர் மதத்தை மாற்றுவதும் அவர் மொழியைத் தாழ்த்திப் படிப்படியாய் ஒழிப்பது மாகும். ஆகவே, தமிழன் தாழ்வே பிராமணன் வாழ்வு என்றும், தமிழின் தாழ்வே சமற்கிருதத்தின் வாழ்வு என்றும் ஆகிவிட்டன. அதனால் ஈரினமும் சமமாக வாழ்தல், புலியும் மானும் ஒரு காட்டுள்ளும், பருந்துங் கிளியும் ஒரு கூட்டுள்ளும், கீரியும் பாம்பும் ஒரு வளைக்குள்ளும் சமமாக வாழ்தல் போலாயிற்று.

ஏமாற்று வாழ்வு நீடிக்காது. (“Cheating play never thrives.”) ஒரு குற்றத்தை மறைக்குந்தொறும் குற்றம் பெருகும்; ஓர் உண்மையை மறைக்குந்தொறும் பொய் பல்கும். “எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும்.” (“Oil and truth will get uppermost at last.”)

இரண்டொரு வையாபுரிகளும் ஒருசில செல்வரும் துணை நிற்பதால், ஏமாற்று வினை நிலைத்துவிடாது. இறைவன் துணை செய்யான்.

பிராமணப் புலவர் பலர் செய்த தமிழ்த்தொண்டைச் சுட்டி, பிராமணரெல்லாரும் தமிழ்ப் பற்றாளர் என்று நாட்டிவிடமுடி