பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலம்

71



சென்னை மாநகரிலுள்ள தென்னிந்திய இந்திப் பரப்பற்கழகம் தமிழுக்குத் தீங்கு விளைத்துவரலால், உடனே தமிழ் நாட்டினின்று நீக்கப்படல் வேண்டும்.

(10) இருமொழித் திட்டம்

கல்வித்துறையில் அடிமுதல் முடிவரை இருமொழித் திட்டத்தையே கடைப்பிடித்தல் வேண்டும். கல்விநேரமல்லாத வேளையிலும், கல்வி நிலையங்களில் இந்தி கற்பிக்கப்படல் கூடாது.

இருமொழித் திட்டத்தை எதிர்ப்பவரைத் தமிழ்ப் பகைவராகக் கொண்டு, நாட்டிரண்டகக் குற்றத்திற்குரிய தண்டனையிடல் வேண்டும்.

தமிழ்நாடு போன்றே திரவிடநாடுகளும் இருமொழித் திட்டத்தை மேற்கொள்ளத் தூண்ட வேண்டும்.

9. தமிழ்ப் பல்கலைக்கழகம்

மதுரை கரந்தை நெல்லை முதலிய நகரத் தொடர்புள்ள தமிழ்க் கழகங்களும், தமிழ்நாட்டு அரசு தமிழ் வளர்ச்சியாராய்ச்சிக் கழகமும், அனைத்துலகத் தமிழாராய்ச்சிக் கழகமும், உலகத் தமிழ்க் கழகமும், பிறவும் ஒன்றுசேர்ந்து பழைய பாண்டியன் தமிழ்க்கழகம் போல் இயங்குதல் வேண்டும்.

உண்மையான தமிழ் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு, தமிழ் நாட்டு வரலாறு ஆகிய மூவரலாறும் விரிவாக எழுதப் பெறல் வேண்டும்.

இசை, நாடகம், கணியம், ஐந்திறம் (பஞ்சாங்கம்), சிற்பம் முதலிய பழந்தமிழ்க் கலைகளைத் தக்க அறிஞரைக் கொண்டு தனித்தமிழில் எழுதுவிக்க வேண்டும்.

முருகன் வழிபாடு, சிவன் வழிபாடு, திருமால் வழிபாடு, அம்மன் வழிபாடு ஆகிய நால்வகை வழிபாட்டு முறைகளையும், அவற்றிற்குரிய போற்றி(அர்ச்சனை)களையும் தனித்தமிழில் தொகுத்து, ஓதுவாரைக் கொண்டு திருக்கோவில் வழிபாடு நடத்துவித்தல் வேண்டும்.

தமிழையும் 21 திரவிடமொழிகளையும் ஆராய்ச்சி முறையிற் கற்பிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.

தொல்காப்பியவுரைகள் பலவிடத்து வேறுபட்டும், சிலவிடத்து வழுவியும், இக்கால மாணவர்க்கு எளிதாய் விளங்காத நடையிலும், இருப்பதால், இலக்கணப் பெரும் புலவரையெல்லாம்