பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/88

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

74

தமிழ் இலக்கிய வரலாறு


2. இலக்கியப் பாகுபாடு

புலவியம்


(Art) கலை

நூல்

தொழிற்கலை

கவின்கலை

அறிவியல் (Science)

கம்மியம் (Technology)

இயற்கை

செயற்கை

உயர்திணை அஃறிணை விரவுத்திணை

பூதநூல்

வேதிநூல்

உயிரி

உயிரிலி

3. மொழிபற்றிய சில வுண்மைகள்

(1) மொழிமாந்தன் அமைப்பே

உலக மொழிகளுள் எதுவும் இறைவன் படைத்ததன்று. இயற்கை யொலிகளான கிளவிகளும் செயற்கை யொலிகளான சொற்களுமாக, ஒவ்வொன்றாய்ப் பையப் பையப் பல்லாயிர மாண்டுக் காலஞ் செலவிட்டு, ஒரு மக்கட் கூட்டத்தார் கூட்டுறவால் ஓர் ஒழுங்குபட அமைத்துக்கொண்ட ஒலித்தொகுதியே மொழி.

உலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் முதல் நாலாயிரம் வரை வெவ்வேறு தொகையினவாகக் கணக்கிடப்பட்டுள்ளன. மாந்தரெல்லாரும் ஓரிணைப் பெற்றோரினின்று தோன்றிப் பல்கி வேறுபட்டிருத்தல் போன்றே, மொழிகளும் ஒரே மூல மொழியி னின்று திரிந்து பல்வேறு வகையில் வேறுபட்டிருத்தல் வேண்டும்.

(2) கருத்துநிகழ்விற்கு மொழி தேவையில்லை

நிலைத்திணை தவிர மற்றெல்லா உயிரினங்கட்கும் கருத்துண்டு. மொழிபேசாத ஊமையரும் பேசுவார் போன்றே கருதுவர். சிறப்பாகக் கட்டபொம்மன் இளவலை நோக்குக.

உணர்ச்சி, விருப்பு, சூழ்வு, துணிபு, மகிழ்ச்சி, இரங்கல், நினைப்பு என்னும் எழுவகையே கருத்தின் இயல்கள். இவற்றிற்கு மொழி தேவையில்லை.