பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு

75


(3) தாய்மொழியுங் கற்கப்படுவதே

ஒரு குழவியை அரையாண்டிற்குள் தாயினின்று பிரித்து மக்கள் மொழித் தொடர்பில்லாது வைத்து வளர்த்தால், எத்தனை யாண்டாயினும் எம்மொழியும் பேசாது.

ஒரு தமிழக் குழவியைப் பிறந்தவுடன் ஓர் ஆங்கில மாதிடம் வளர்க்கவிட்டால், அது நாளடைவில் ஆங்கில மொழியே பேசும்; ஓர் அரபி மாதிடம் வளர்க்கவிட்டால், வாயமைப்பு நுண்வேறுபாட்டால் ஒலிப்பு முறையிற் சற்று இடர்ப்படினும், அரபி மொழியே பேசும்.

ஒவ்வொரு பிள்ளையும், குழந்தைப் பருவத்திற் பெற்றோரிடமும், பிள்ளைப் பருவத்திற் பெற்றோர் உற்றோரிடமும், பையற் பருவத்திற் பெற்றோர் உற்றோர் மற்றோரிடமும், ஒவ்வொரு சொல்லாக முயற்சி வருத்தமும் வினையுணர்ச்சியு மின்றிக் கற்றே தன் தாய்மொழியைப் பேசப் பயில்கிறது.

தாய்மொழியை நன்கு பேசக் கற்றபின்பும், அதிற் பேசுவதை நிறுத்திவிட்டுப் பல்லாண்டு அயன்மொழியிலேயே பேசிவரின், தாய்மொழிப் பேச்சாற்றால் மிகக் குறையும்.

(4) மொழிவாழிடம் நாவே

மொழியென்பது, ஒரு விலங்கும் பூதமும் போன்று மக்கட்கு அப்பாற்பட்ட ஓர் உருவமன்று. ஒரு மக்கள் வகுப்பார் தம் கருத்துகளைப் பிறர்க்குத் தெரிவிக்கும் வாயிலாகப் பயன்படுத்தப்படும் ஒலித் தொகுதியே மொழி. ஒலி நிகழ்வது வாயில். ஆகவே, மொழி வாழிடம் நாவே. மொழிவலர் நாவலர். மொழித் தெய்வம் நாமகள். ஒரு சொல்லை வழங்காவிடின், அது ஒலியிழக்கும். அதனால் இறந்துபடும். அது இலக்கியத்தில் எழுதப்படாவிடின், பிணம்போற் கிடப்பதுமின்றி மறைந்தொழியும். பல சொற்கள் ஒலியிழப்பின் ஒரு பகுதியும், எல்லாச் சொற்களும் ஒலியிழப்பின் முழுவதும், ஒரு மொழியழியும். ஒருமொழி ஆட்சிமொழியாயின், பொதுமக்கள் அதன் சொற்களையே ஆள விரும்புவர்: அதனால், இந்தியால் தமிழ் கெடாது என்று பேராயத் தலைவர் சொல்வது பிதற்றலே.

ஆங்கிலம் ஆட்சிமொழியானது தமிழில் இல்லாத அறிவியல் இலக்கியச் சிறப்பினாலேயே. அவ் வியல்பு இந்திக்கில்லை. மேலும், ஆங்கிலர்க்குத் தமிழை யொழிக்க வேண்டும் என்னும் குறிக்கோளில்லை. வடமொழியார்க்கும் இந்தியார்க்கும் அஃதுண்டு.

மொழியென்பது உண்மையில் ஒலித்தொகுதியே. மக்கள் அறிவுங்கருத்தும் சேய்மையார்க்கும் பிற்காலத்தார்க்கும் பயன்-