பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/92

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

78

தமிழ் இலக்கிய வரலாறு


பற்றதும், பகுத்தறிவிற்கு முற்றும் முரணானதும், ஆன பிறவிக்குலப் பிரிவினையை உணர்த்தும் குலப்பட்டங்களை இன்றுந் தமிழர் தாங்கி வருவது இக்காலத்திற் கேற்காததாகும்.

பண்டைத் தமிழகத்தில் இம் மூடவழக்கம் இருந்ததே யில்லை. எல்லா வகுப்பாரும், பிறநாட்டார்போல் தம் பெயரை இணைப்பு வாலின்றி வெறுமையாகவே வழங்கிவந்தனர். அறிவும் நாகரிகமும் துப்புரவும் ஒழுக்கமும் உண்மையின்மைகளே, உயர்வுதாழ்வைக் குறித்துவந்தன. ஆரியப் பிறவிக்குல வுயர்வுதாழ்வைத் திருவள்ளுவர் தெளிவாகக் கண்டித்தார்.

பகுத்தறிவியக்கப் பகலவன் என்னும் பெரியார் தம் கற்பிப்பிற் கேற்ப, பிறவிக்குல வொழுங்கை மீறியே ஒரு பெண்ணை மணந்தார். அவரைப் பின்பற்றுவதாகப் பிதற்றும் பலர், மதவியல் ஒன்று தவிர மற்றவற்றில் அவர் பெயர் கெடுமாறே ஒழுகிவருகின்றனர். பிறவிக் குலவுணர்ச்சியைச் சொல்லளவில் நீக்கினும் உள்ளளவில் நீக்கவில்லை.

பகுத்தறிவியக்கம் தமிழரெல்லார்க்கும் பொதுவாயினும், பெரியாரைப் பின்பற்றியர் அல்லது பகுத்தறிவாளர் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர், தாமே முன்பு பகுத்தறிவொழுக்கம் பூண்டு பிறர்க்கு வழிகாட்டல் வேண்டும்.

மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம்

தனித்தமிழ் என்பது, மறைமலையடிகள் புதிதாகத் தோற்றுவித்ததும் அவரொடு முடிந்து போவதுமான ஓர் ஏற்பாடன்று. பால் எங்ஙனம் தனிப்பாலாகவே தோன்றிப் பின்னர் விற்பனையாளரின் பேராசையால் தண்ணீர் கலக்கப்படுமோ, அங்ஙனமே தமிழும் முதற்கண் தனித்தமிழாகவே தோன்றிப் பின்னர் ஆரியரின் பொறாமையால் வடசொற் கலக்கப்பட்டது; ஆங்கிலர் வருமுன் ஆங்கிலச் சொல் கலவாதிருந்தது போன்றே, ஆரியர் வருமுன் ஆரியச் சொல்லுங் கலவாதிருந்தது.

முதலிரு கழகக் காலத்தும், வேந்தர் பெயர்களும் பொதுமக்கள் பெயர்களும் முழுத் தூய தமிழ்ச்சொற்களாகவேயிருந்தன. எ-டு:

பாண்டியர் சோழர் சேரர்

கடுங்கோன் இளஞ்சேட் சென்னி சேரலாதன்

காய்சினவழுதி தொடித்தோட்செம்பியன் செங்குட்டுவன்

இளமாறன் பெருநற்கிள்ளி கணைக்காலிரும்பொறை

நெடுஞ்செழியன் மாவளவன் சேரமான் மாக்கோதை