பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு

79




பொதுமக்கள்: ஆதன், பூதன், கண்ணன், பண்ணன், காடன், கோடன், நன்னன், பொன்னன், நாகன், பேகன், தென்னவன், மன்னவன், தேவன், மூவன், வள்ளுவன், மள்ளுவன், வேலன், மூலன், மருதன், விருதன்.

இன்று வடநாடும் தென்னாடும் ஒன்றென்னும்படி பெயர்கள் மாறியுள்ளன.

தென்சொல்வளங் குறைந்த மூவகை

(1) பழம்பாண்டி நாடு முழுகிப்போனமையால் அந்நாட்டு உலகவழக்குச் சொற்கள் மறைந்தமை.

(2) பண்டும் இடையும் தமிழிலக்கியம் இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழியுண்டாமையால், அவற்றின் இலக்கிய வழக்குச் சொற்கள் ஒழிந்தமை.

(3) தமிழர் அயற்சொற்களை வழங்கினமையால்அவற்றிற்கு நேரான தென்சொற்கள் இறந்துபட்டமை.

தமிழ் தனித்து வழங்காதென்று சிலர் கருதற்குக் காரணங்கள்

(1) ஆயிரக்கணக்கான தென்சொற்கள் இறந்துபட்டமை.

(2) வடமொழிச் சென்று வழங்கும் நூற்றுக்கணக்கான தென்சொற்களை வடசொற்களென்று தவறாகக் கருதுகை.

(3) புதுச்சொற்களை வேண்டிய அளவு புனைந்து கொள்ளலாம் என்னும் அறிவின்மை.

6. தமிழ் திரவிட வேறுபாடு

ஒருகாலத்தில் ஒரு நாட்டில் ஒரே மொழியைப் பேசிக் கொண்டிருந்த மக்கட்கூட்டம், பின்னர்ப் பல்வேறிடத்திற் பரவிப் பல்வேறின மொழிகளைப் பேசும் பல்வேறு நாட்டினங்களாய்ப் (nations) பிரிந்து போகலாம். மாந்தன் வரலாற்று முதற்காலத்திற் குமரிநாட்டில் தமிழொன்றே பேசிவந்த மக்களினம், இன்று இந்தியா முழுதும் பரவி, தமிழும் தெலுங்கு, கன்னடம் முதலிய இருபதிற்குக் குறையாத இனமொழிகளும் பேசும் மக்களினங்களாகப் பெருகியும் பிரிந்தும் உள்ளது.

தமிழ் திரிந்ததுபோன்றே, தமிழம் என்னும் சொல்லும் திரவிடம் எனத் திரிந்துள்ளது. அத் திரிசொல் முதற்கண் தமிழின் மறுபெயராக வழங்கிப் பின்பு தமிழையும் அதன் திரிமொழிகளையும் ஒரே இனமாக அடக்குங் குடும்பப் பெயராக வழங்கி