பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/94

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

80

தமிழ் இலக்கிய வரலாறு


 வருகின்றது. இது பிறநாட்டு மொழிநூலறிஞரால் ஒப்புக்கொள்ளப் படினும், இயற்கை வேறு பாட்டாலும் ஆரியக்கலப்பாலும் நேர்ந்துள்ள சில இடர்ப்பாடுகளால், தமிழைத் திரிமொழிகளினின்று பிரித்து, அத்திரிமொழிகளை மட்டும் திரவிடமென்று குறிக்கவும், அவ் விரண்டையும் பொதுப்படக் குறிக்கத் தென்மொழி என்னும் சொல்லை ஆளவும், வேண்டியுள்ளது. இம் முடிபிற்குத் தூண்டும் தமிழ் திரவிடவேறுபாடுகளும் மாறுபாடுகளும் வருமாறு:

தமிழ்

1.மூச்சொலியும் தனியெடுப் பொலியுமின்றிப் பெரும்பாலும் மெல்லொலி மொழியாயிருத்தல்.

2. சொல்வளமும் சொல்லாக்க ஆற்றலும் மிக்குப் பிறமொழிச் சொற்கலப் பில்லாத் தூய்மையை வேண்டல்.

3. சமற்கிருதத்தைப் பகையாகக் கோடல்.

4. வடமொழி தமிழ்த்திரிபென்னுங் கொள்கையுண்மையும் திருக்கோவில் வடமொழி வழிபாட்டை விலக்கலும்.

5. சொற்கள் பெரும்பாலும் திருந்திய வடிவில் வேர்ச்சொல் காட்டி நிற்றல்.

6. ஆரியச் சார்பற்ற தூய தனியிலக்கியமுண்மை.

7. தமிழன் பிறந்தகத்தை அறிதற்கான தொல் வரலாற்றுச் சான்றுண்மை.

8. பொருளிலக்கணமுங் கூறும் முழுநிறைவான இலக்கண முண்மை.

திரவிடம்

மூச்சொலியும் தனியெடுப்பொலியும் வலிப்பொலியும் மிக்கு ஆரியத் தன்மை யடைந்திருத்தல்.

சொல்வளமும் சொல்லாக்க ஆற்றலு மின்மையால் தூய்மை வேண்டாது எம்மொழிச் சொற்கலப்பையும் ஏற்றல்.

சமற்கிருதத்தை நட்பாகக் கோடல்.

வடமொழி திரவிடத்திற்கு மூலமான தேவமொழி யென்னுங் கொள்கையும், வடமொழி வழிபாட்டையே போற்றுதலும்.

சொற்கள் பெரும்பாலும் திரிந்தும் சிதைந்தும் வேர்ச்சொல்லின்றி நிற்றல்.

பெரும்பாலும் ஆரியச் சார்பான இலக்கியமே கொண்டுள்ளமை.

தொன்னிலையறிதற் கியலாத 9ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட இலக்கியமே யுண்மை.

பொருளிலக்கணமின்மை.