பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/95

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பின்னிணைப்பு

81


 9. வடமொழித் தொன்மங்களை (புராணங்களை) ஒப்புக் கொள்ளாமை.

10.கட்டாய இந்தியை எதிர்க்கும் உணர்ச்சி தமிழர்க்கு விஞ்சி யிருத்தல்.

11. பெரும்பாலும் குமரிநிலத் தமிழுக்கு நெருங்கிய இயன்மொழி.

12. வடசொல் தீரத்தீரச் சிறப்பது

வடமொழிப் புராணங்களை முற்றும் ஒப்புக்கொள்கை.

கட்டாய இந்தியை எதிர்க்கும் உணர்ச்சி திரவிடர்க்கின்மை.

பெரும்பாலும் தமிழின் திரிமொழி

வடசொல் சேரச்சேரச் சிறப்பது.

இவற்றால், தமிழ் திரவிடத்தினின்று மிக வேறுபட்டதென்பது தெளிவாகும்.

7. உலகத்தமிழ் மாநாடுகள்

அனைத்துலகத் தமிழ் மாநாடுகள் இதுவரை நான்கு நிகழ்ந்துள்ளன. அவற்றால் தமிழுக்கு எத்தகைய ஆக்கமும் ஏற்படவில்லை. அதற்கு மாறாகக் கேடே விளைந்துள்ளது. நான் மாநாடுகளும் தமிழின் பெயரால் நிகழ்ந்த விரிநீர் வியனுலகச் சுற்றுலாக்களே யன்றி வேறல்ல.

முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறாது அயல்நாட்டில் (மலேசியாவில்) நடைபெற்றதே, தமிழுக்கு நற்குறியன்று. அம் மாநாட்டிற்கு, தனித்தமிழ்ப் புலவரும் உண்மையான ஆராய்ச்சியாளரும் குமரிநாட்டுத் தமிழ்த்தோற்றக் கொள்கையினரும், ஆரியத்தையும் இந்தியையும் எதிர்த்துத் தமிழைக் காக்கும் உறுமனத்தரும், வெற்றழைப்புமின்றி வரையறவாக விலக்கப்பட்டனர். மறைமலையடிகள் உடலோடிருந்திருப்பினும் அதற்கு அழைக்கப்பட்டிரார் என்பது திண்ணம். வையாபுரிகளும், வலவன்பாடிகளும், நிலைத்த கொள்கையின்றிக் காலத்திற் கேற்பக் கருத்துமாறும் தன்னலக் காரரும், இந்தித் திணிப்பையும் வடமொழி வழிபாட்டையும் எதிர்க்க எண்ணுவதுஞ் செய்யாத போலி நடுநிலைப் பேடிமனத் தரும், தமிழறியாத பெருமாளரான கட்சித்தலைவரும், தூய ஆரியருமே தமிழ்நாட்டினின்று இருவழி வானூர்தி யேற்பாட்டுடன் வரவழைக்கப் பட்டனர்.

இரண்டாம் மாநாடு தமிழ்நாட்டில் நடந்தது. அது அண்ணாதுரை ஆட்சிக் காலமாதலால், தனித் தமிழ்ப்புலவர்க்கும் உண்மை யாராய்ச்சியாளர்க்கும் இடங்கிடைத்தது. ஆயின், மாநாடு நடத்தும்