பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

வடமொழி வரலாறு


சுள் - சுட்கு - சுக்கு. இஞ்சி X சுக்கு.


இஞ்சியை இஞ்சிவேர், இஞ்சிக் கிழங்கு, இஞ்சிப்பாவை என்று சொல்வது வழக்கம்.

இஞ்சி, கிறித்துவிற்கு முற்பட்ட பண்டைக் காலத்திலேயே, ங்கிருந்து மேனாடுகட்கு ஏற்றுமதியான பொருள்களுள் ஒன்றாம். ம. இஞ்சி, கு. இஞ்சி, கோ. இஞ்ச், பர். சிங்கிவேர.

L. zingiber, Gk. zingiberis, LL. gingiber, OE. gingiber, E. ginger, Slet. srngavera.

மேலையாரியச் சொற்களெல்லாம் இஞ்சிவேர் என்னும் தமிழ் வடிவைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. அவற்றை வழங்குவோரும் அவற்றைத் தமிழ்ச்சொல்லின் திரிபென ஒத்துக்கொள்வர். ஆயின் வேதமோதுவது தவிர வேறொன்றுந் தெரியாத வடமொழியாளரோ, இஞ்சிவேர் என்பதைச் ச்ருங்கவேர் எனத் திரித்து, மான்கொம்பு போன்ற வடிவினது என்று வலிந்தும் நலிந்தும் பொருள் கூறி, அதை வடசொல்லாகக் காட்ட முயல்வர். ச்ருங்க என்பது கொம்பு என்று மட்டும் பொருள்படும். இஞ்சிவேர் பொதுவாகக் கிளைகிளையா யிருப்பதுபற்றி. அதை மான்கொம்பொடு ஒப்பிட்டு மான் என்னுஞ் சொல்லையுஞ் சேர்த்துக்கொண்டது, வடமொழியாளர்க்குத் தென்மொழி மீதுள்ள அழுக்காற்றையும், பகுத்தறிவிற்குச் சற்றும் பொருந்தாவாறு துணிந்து கட்டிக் கூறித் தென்சொல்லை வடசொல்லாகக் காட்டும் இழிவழக்கத்தையும், காட்டச் சிறந்த தொரு சான்றாம். வேர என்பதும் உடம்பு என்று பொருள்படுவதே யன்றி, வேர் என்னும் பொருள் கொண்டதன்று. இத்தகைச் சொற்பொருட் காரணத்தை மேலையரும் ஏற்றுக்கொண்டது, அவரின் தமிழறியாமையையும் அதனால் விளையுந் தீமையையும் காட்டுவதாகும்.

இட்டி - யஷ்டி

டு - இட்டி = ஒடுங்கிய அலகுள்ள வாள்வகை. "இட்டிவேல் குந்தங் கூர்வாள்

(சீவக. 2764)

இட்டி - ஈட்டி. க., ம. இட்டி.

வடமொழியில் மூலம் இல்லை.

-

இட்டிகை இஷ்டகா

இடு இடுகு -இடுக்கு இடுக்கம். இடு - -

டு-இ டு - இட்டிது

=

சிறிது.

66

'ஆகா றளவிட்டி தாயினும்”

(குறள்.478)