பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

105


கணக்க = போல. குரங்கு கணக்க ஓடுகிறான் என்னும் உலக வழக்கை நோக்குக. அந்தக் கணக்கில் (கணக்காய்) = அதைப் போல. கணக்கன் = கணக்குப் பார்ப்பவன், கணக்கத்

கணக்கு

தொழிற் குலத்தான்.

வடவர் காட்டும் கண் (g) என்னும் மூலம் இதற்குரியதன்று.

கணம்

கண (g) இ.வே.

து மேல் விளக்கப்பெற்றது.

(g)

கணி

கண்

-

கண் கணி. கணித்தல்

=

புறக்கண்ணாற் காணுதல், அகக்

கண்ணாற் காணுதல், மதித்தல், அளவிடுதல், கணக்கிட்டு வகுத்தல்.

கடைக்கணித்தல், சிறக்கணித்தல், புறக்கணித்தல் என்பன புறக்கண்ணாற் காண்டலைக் குறித்தல் காண்க.

கணிதம் கணித (g)

கணி - கணிதம் = கணிப்பு, பல்வகைக் கணக்கு.

கணிதம் கணிசம் = மதிப்பு (உத்தேசம்). கணிசம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை.

குழம்பிற்குக் கணிசமாய் உப்புப் போடு என்னும் வழக்கை

நோக்குக.

-

கணிதம் கணிதன் = கணியன், கணக்கறிஞன்.

கணி கணி (g)

கணி = கணிப்பவன், கணியன் (சோதிடன்). கணிகன், கணியன், கணிவன் என்னும் வடமொழியில் இல்லை.

1

கணிகை கணிகா (g)

கணி - கணிகை = தாளங்கணித் தாடுபவள்.

கத்தரி

கர்த்தரி

வடிவங்கள்

கத்துதல் = வெட்டுதல். இவ் வினை பிற்காலத்து வழக்கற்றது. கத்து - கத்தி = அறுக்கும் அல்லது வெட்டுங்கருவி.

ஒ.நோ: கொத்து - கொத்தி, வெட்டு - வெட்டி.

கத்து + அரி = கத்தரி. கத்தரித்தல் = வெட்டி நறுக்குதல். அரிதல் = சிறிதாய் நறுக்குதல், அரித்தல் =அராவித்தேய்த்தல். கதக்குக் கதக்கென்று வெட்டுதல் என்பது உலகவழக்கு.