மொழியதிகாரம்
111
கன்னி
வடவர் காட்டும் க்ருத், க்ரு என்னும் மூலங்கள் பொருந்தா. க்ருத் = 1. செய்துகொண்டு, 2. சிதைவு, 3. திருகு, சுற்று.
க்ரு = 1. கொட்டு, ஏறி, சிதறு. 2. சிதை, 3. அறி, அறிவி.
―
கன்யா (இ.வே.)
கன்னுதல் = பழுத்தல். கன் கன்னி கனி =
கன்னி =
-
-
பழுத்தது, பழம்.
பழுத்தவள், பூப்படைந்தவள். Mature என்னும்
ஆங்கிலச் சொல்லை நோக்குக.
கன்னி - கன்னிகை = பூப்படைந்த இளைஞை.
கை என்பது இங்குச் சிறுமைப்பொருட் பின்னொட்டு. கன்னிகை-கன்யகா
வடவர் காட்டும் கன் என்னும் மூலம் பலபொரு ளொருசொல்லும் பொருந்தாப் பொருட்சொல்லும் ஆகும். -கன (gh)
கனம்
கல் - கன் = 1. கல்(சூடா.). 2. உறுதிப்பாடு (ஈடு, 5: 8:3). கன் -கன. கனத்தல் = பளுவாதல், மிகுதியாதல், பருத்தல், குரல் தடித்தல், பெருமையுறுதல்.
-
கன கனம் = பளு, பருமன், பெருமை, செறிவு, திரட்சி உறுதி, மிகுதி, கூட்டம், மும்மான வடிவு.
பொதுவாகக் கனத்திற்கு எடுத்துக்காட்டாகச் சொல்வது கல்லே. கல்லைப்போற் கனக்கிறது என்பது உலக வழக்கு. பண்டை நாளிற் கனத்த எடைக்கெல்லாம் கல்லையே பயன்படுத்தியதால், படிக்கல் க்கல் என்னும் வழக்கெழுந்தது. இங்கிலாந்திலும் அவ் வழக்கமிருந்ததை stone (14 பவுண்டு) என்னும் சொல் உணர்த்தும்.
வடமொழியில் கனத்தல் என்னும் வினையில்லை. மா. வி. அகர முதலி காட்டியிருக்கும் ஹன் (கொல்) என்னும் மூலம், வடமொழியிற் கன என்னும் சொற்குள்ள பல்வேறு பொருள்களுள் ஒன்றற்குத்தான் ஏற்கும்.
கா
-
கா(
வே.)
கவ - கவர்தல் = விரும்புதல்.
"கவர்வுவிருப் பாகும்"
கவகா-காதல் = விருப்பம், அன்பு.
கா (வ.) = விரும்பு, அவாவு, அன்புகூர்.
வடமொழியார் கன் என்பதை மூலமாகக் காட்டுவர்.
காம் - கம் - கன் என்று திரிந்திருக்கலாம்.
(п.845)