மொழியதிகாரம்
149
'திரம்' ஒரு தொழிற்பெய ரீறு.
எ-டு : மாத்திரம், மோட்டிரம் - மோத்திரம் = மூத்திரம். சித்திரக் கம்மம் = ஓவிய வேலைப்பாடு.
"செந்நூல் நிணந்த சித்திரக் கம்மத்து
(பெருங். உஞ்சைக். 35:
98).
சித்திரக்கம்மி = ஓவியத் தொழிலமைந்த ஆடைவகை
சித்திரச் சோறு = பலநிறச் சோறு.
(சிலப்.74:108,உரை)
"சித்திரச் சோற்றிற் செருக்கினேன்” (அருட்பா. 6, அவாவறுப்பு. 7) சித்திரப் படம் = பல வண்ண அல்லது பூத்தொழிலமைந்த உறை.
"சித்திரப் படத்துட் புக்கு" (சிலப்.7 : 1).
சித்திரப் பாலடை, சித்திரப் பாலை என்பன பூண்டு வகைகள். வல்லெழுத்தை மெல்லெழுத்தாகக்
சித்திரப் புணர்ப்பு
=
கொள்ளும் பண்ணீர்மை (சிலப்.3 : 56, உரை).
சித்திரமாடம் = ஓவியம் வரைந்த மாளிகை.
"பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்"
(புறம்.59).
சித்திரவண்ணம் = நெடிலுங் குறிலும் விரவிய ஓசை.
"சித்திர வண்ணம்
நெடியவுங் குறியவும் நேர்ந்துடன் வருமே'
செய்தல் = ஒத்தல்.
""
"வேனிரை செய்த கண்ணி
(தொல்.1478)
(சீவக. 2490)
செள் - செறு - செறி. செள் - செண்டு - செண்டை = இரட்டை. செள் - செய் - செ. ஒ.நோ: பொய் - பொ. பொத்தல் = துளைத்தல்.
-
சித்திரம் சித்திரி. சித்திரித்தல் = சித்திரம் வரைதல், சுவடித்தல், வண்ணித்துப் பேசுதல்.
வடவர் சித்ர என்பதைச் சித் என்பதன் திரிபாகக் கொண்டு, தெளிவாய்த் தெரிதல், விளக்கமான நிறம், வண்ண வேறுபாடு, வண்ணப்படம் என்று வலிந்து பொருத்திக் காட்டுவர். சித்திரித்தல் என்னும் வினை வடமொழியிலில்லை.
சிதம்பரம்
—
சிதம்பர (c)
சிற்றம்பலம் - (சித்தம்பலம்) - (சித்தம்பரம்) - சிதம்பரம்.