பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

வடமொழி வரலாறு


சிலர், மங்கலமானவன், நன்மை செய்பவன் என்று பொருள் கூறுவர்.

சிவன் தமிழ்த் தெய்வமாதலானும், நெருப்பின் கூறாகக் கொள்ளப்படுதலானும்,முத்தொழில் முதல்வன் என்பதே தமிழ்க்கொள்கை யாதலானும், குமரிக்கண்டத்திலேயே சிவ வணக்கம் தொடங்கி விட்டமையானும், ஆரியவழிப் பொருட் காரணம் ஒருசிறிதும் பொருந்தா.

சிவன் - சிவை (மலைமகள்).

சிவை சிவா

சிவிகை

-

சிவிகா, சிபிகா

சிவிதல் = சுருங்குதல். சிவிந்தபழம் = முற்றாது சுருங்கிப்போன பழம். சிவிங்கி = சிறுத்தைப்புலி.

சிவிகை = இருவர் தூக்கும் சிறிய மூடுபல்லக்கு.

-

சிற்பம் ஸ்வல்ப

சீகாழி

சீகாழி.

-

சிற் சிற்பு சிற்பம் = மிகக் கொஞ்சம்.

-

"சிற்பங்கொள் பகலென" (கம்பரா. சடாயுகாண். 8).

-

ஸ்ரீகாலீ

திரு -ஸ்ரீ. காளி - காலீ. திருக்காளி திருக்காழி ஸ்ரீகாழி-

சிலர் சீர்காழி - சீகாழி என்பர்.

சீம (தெ.) - ஸீமிக = எறும்பு.

சீர்த்தி - கீர்த்தி (அ.வே.)

சீர் = 1. பெருமை. "சீர்கெழு கொடியும்" (புறம். 1). 2. மதிப்பு. "வணக்கருஞ் சீர்...மன்னன்" (பு.வெ. 9 : 22). 3. புகழ். "ஆனாச்சீர்க் கூடலுள்" (கலித். 30).

சீர்த்தல் = சிறத்தல்.

"பொருடன்னிற் சீர்க்கத் தருமேல்" (திவ்.திருவாய். 8 : 7 : 6). சீர் - சீர்த்தி = மிகுபுகழ். "சீர்த்தி மிகுபுகழ்" (தொல். சொல்.313). சீர்த்தி - கீர்த்தி = புகழ். "விண்சுமந்த கீர்த்தி" (திருவாச.8:8). கீர்த்திமான் = புகழ்பெற்றவன். கீர்த்தி - கீர்த்திமை.

""

"அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி (திவ்.திருப்பா.13)