பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

155


சுண்ணம் - சுண்ணம்பு - சுண்ணாம்பு. சுண்ணித்தல் = நீற்றுதல் (சங்.அ.)

சுண்ணகம்

-

சூர்ணக (C)

சுண்ணம் - சுண்ணகம் = நீறு, பொடி. வடவர் காட்டும் மூலம் சர்வ் (c) என்பதே. சர்வ் = பல்லினால் அரை, மெல், சவை, சுவை. இது சவை என்னும் தென்சொற் றிரிபே. சுதை ஸுதா (dh) = சுண்ணாம்புச் சாந்து.

சுல் - சுல்லு = வெள்ளி (சூடா. வெண்பொன்). சுல் - (சுலை) - சுதை = 1. வெண்மை (சூடா.) 2. வானவெள்ளி (அக. நி.) 3. மின்னல் (சங். அக.) 4. சிப்பிச் சுண்ணாம்பு.

வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து" (மணிமே. 6: 43).


5. பால். “சுதைக்க ணுரையைப் பொருவு தூசு" (கம்பரா.வரைக். 16). 6. அமிழ்து “சுதையனைய வெண்சோறு" (கம்பரா.குலமுறை18). இங்குக் குறிக்கப்பட்டுள்ள பொருள்களெல்லாம், வெண்மை யாய் இருத்தலை நோக்குக. ல - த, போலி ஒ.நோ: சலங்கை-சதங்கை, மெல்-மெது.

மா. வி. அ. காட்டியுள்ள மூலமும் பொருள் வரிசையும்

வருமாறு:

சும

ஸு - தா (dh) = ஸு + தே (dhe) = நற்குடிப்பு, தேவர் குடிப்பு, அமிழ்து, தேன், சாறு,நீர்,பால், வெள்ளை யடிப்பு, பூச்சு, சாந்து, சுதை.

ஸு = நல்ல. தே = உறிஞ்சு, குடி.

ஸ=

க்ஷம் = பொறு.

பொறுத்தல்

=

சுமத்தல், தாங்குதல், தாளுதல், மன்னித்தல், இடந்தருதல். இளக்காரங் கொடுத்தல், துன்பந் தாங்குதல் (பொறை), அமைதியாய்க் காத்திருத்தல் (பொறுமை).

சும, பொறு என்பவை ஒருபொருட் சொற்கள். பொறு என்னும் சொல்லின் பொருள்களே க்ஷம் என்னும் சொற்கும் உரியன.

-

உம்-உம்பு - உம்பர் - மேல், மேலிடம், உச்சி. உம்சும்(சுமை) சிமை = உச்சி, குடுமி. சும்

-

சும. சுமத்தல் = மேற்கொள்ளுதல், தாங்குதல். சும் சுமல் -சுவல் = சுமக்குந் தோட்பட்டை, முதுகு,

-