பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

வடமொழி வரலாறு


எட்டம் = உயரம், தொலைவு.

எடுத்தல் = உயர்த்துதல், தூக்குதல்.

எட்டு - எட்டி = 1. உயர்ந்தவன், மேலோன். 2. பண்டையரசர் வணிக மேலோனுக்கு அளித்த பட்டம்.

“எட்டி குமர னிருந்தோன் றன்னை" (மணிமே. 4: 58).

3. வணிகன் (திவா.).

எட்டிப்பூ

=

எட்டிப்பட்டம்

பெற்றவனுக்கு அரசர்

கொடுக்கும் பொற் பூ. “எட்டிப்பூப் பெற்று" (மணிமே. 22: 113).

எட்டிப்புரவு

=

எட்டிப்பட்டம் பெற்றவனுக்கு அரசன்

கொடுத்த நிலம் (நன். 158, மயிலை. உரை).

எட்டி - செட்டி. ஒ.நோ : இளை - சிளை, உதை - சுதை, ஏண் - சேண். செட்டிமை = வணிகம், வணிகம், செட்டு.

செட்டி - செட்டு = செட்டித்தனம், சிக்கனம்.

செட்டி - சேட்டி - சேட்டு = வடநாட்டு வணிகன். வடமொழியார் காட்டும் மூவேறு மூலம் வருமாறு:

(1) ச்ரீமத் (திருமான்) என்பதன் உச்சத்தரம் (sup. deg.) (2) ப்ரசஸ்ய (புகழப்படத்தக்கவன்) என்பதன் உச்சத்தரம். (3) ச்ரீ (திரு) என்பதன் உச்சத்தரம்.

தென்சொற்களை வடசொல்லாக்கும் வழிகளுள் ஒன்று முத லெழுத்தின்பின் ரகரம் இடைச்செருகல்.

-

-

எ-டு : தமிழம் த்ரமிள, த்ரமிள, கமுகம் - க்ரமுக, திடம் த்ருட, நட்டம் ந்ருத்த, படி ப்ரதி, மெது ம்ருது, விடை

வ்ருஷ.

இம் முறையில் செட்டி என்பதை (வடமொழியில் எகரம் ன்மையால்) ச்ரேட்டி எனத் திரித்து. அதற்கேற்பப் பொருந்தப் பொய்த்தல் என்னும் உத்திபற்றி வெவ்வேறு மூலங் காட்டு வாராயினர்.

செட்டி என்பது, தமிழில் வணிகனைமட்டுங் குறிக்கும் என்றும், ச்ரேஷ்டின் என்பது வடமொழியிற் சிறந்தோன் எவனையுங் குறிக்கும் என்றும் வேறுபாடறிக.

செம்பியன் சைப்ய (b)

ஆரியர் வருமுன் ஒருகாலத்தில் இந்தியா முழுதும் பாண்டியர் ஆட்சியிலிருந்தது.