பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

17


Gk. imen, L. imus, iter; Slav. idu = I go, iti = to go, Goth. iddja = Iwent.

இ (இ.வே., அ.வே.),= செல்.

இத்

= செல்கை. இத்த = போய். இத்தம் = வழி (ச.பி.). இயங்குஇக் (ikh) = இயங்கு, செல்;

-

இயங்கு இங்க் (inkh) = இயங்கு, செல்.

இயங்கு-இங் (இ. வே. ing) = இயங்கு, செல்.

வே.) = ஏகு, நெருங்கு, அடை.

ஏத்த = சென்று, அடைந்து (இ.வே.)

ஏ - யா. (இ. வே.) = செல். யாத்த = போய் (இ.வே.).

=

யாத்ரி (இ. வே.) = செலவு, வழிப்போக்கு.


இ (இய்), ஏ (ஏகு) என்னும் இருவினைகளையும், வேத மொழியில் செல்லுதல், சென்றடைதல், அடைதல், பெறுதல் என்னும் பொருள்களில் ஆண்டிருக்கின்றனர். இப் பொருள்களில் அவை எய்து என்னும் வினையை ஒத்திருக்கின்றன. எய்துதல் சென்றடைதல், அடைதல், பெறுதல். இய் எய் - எய்து.

-

=

செல்லுதல் என்னும் பொருளில் வேதமொழியில் வழங்கும் கம் (gam) என்னுஞ் சொல், தியூத்தானியத்திலுள்ள gan (E.go) என்னுஞ் சொல்லைப் பெரிதும் ஒத்திருத்தல் காண்க.

சலவு என்று பொருள்படும் கம (gama), கமன (gamana) முதலிய சொற்களில் கம் என்பது முதனிலையா யிருப்பினும், கத (போய்), கதி (போக்கு) முதலிய சொற்களில் க (ga) என்பதே முதனிலையா யிருப்பது கவனிக்கத் தக்கது. மேலும், gan என்பது gam என்று திரிதலும் இயல்பே.

வந்த என்னும் எண்ணுப் பெயர்

தெலுங்கில் நூற்றைக் குறிக்க, நூறு என்னுஞ் சொல்லொடு வந்த என்னுஞ் சொல்லுமுளது.

இச் சொல் இலத்தீனிலுள்ள centum என்னும் நூற்றுப்பெயரை ஒத்துளது. இதன் ஆங்கிலப் பலுக்கம் செந்தும் என்று சகர முதலா யிருப்பினும், இலத்தீன் பலுக்கம் கெந்தும் என்பதே. கிரேக்கத்தி லுள்ள ஹெகந்தொன் என்னும் பெயரும் இதன் மறுவடிவே.

கிரேக்கம் இலத்தீனைவிடத் திரிந்த மொழியாதலால், அவ்விரு மொழிக்கும் பொதுவான சொற்கள் பெரும்பாலும் கிரேக்கத்தில் சற்றுத் திரிந்தேயிருக்கும். அத் திரிபு பெரும்பாலும் முன்மிகை யாகவே யிருக்கும்.