பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

21


4. வடமொழிப் பெயர்கள்

வேதமொழி அல்லது அதன் செயற்கை வளர்ச்சியான இலக்கிய நடைமொழி (Literary dialect), வடக்கினின்று வந்ததால் வடமொழி என்றும், நன்றாகச் செய்யப்பட்டது என்னும் பொருளில் சமற்கிருதம் (ஸம்ஸ்க்ருத) என்றும், தேவர் பேசுவது என்னும் பொருளில் தேவமொழி (தேவபாஷா) அல்லது கீர்வாணம் என்றும், ஆரியர் மொழி என்னும் பொருளில் ஆரியம் என்றும் பெயர் பெறும்.

இவற்றுள் பின் மூன்றும், ஆரியர் அல்லது பிராமணர் தமிழரின் ஏமாறுந் தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு, தம் அளவிறந்த செருக்கினால் தற்புகழ்ச்சியாகத் தாமே கொண்ட பெயராகும்.

ட்டுக்

ஆரியம் என்னும் சொல் பிற்காலத்தில் ஆரிய அமைப்புள்ள மொழிகட்கெல்லாம் பொதுப்பெய ராகிவிட்டதனால், வேத மொழி அல்லது சமற்கிருதம் இந்திய ஆரியம் என்று அடை கொடுத்துக் குறிக்கப்பெறும்.

ஆரியன் என்னும் சொற்கு, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலியில், ஆரிய வகுப்பினன், ஆரியாவர்த்த வாசி, பெரியோன், ஆசாரியன், அறிவுடையோன், உபாத்தியாயன், ஐயனார், மிலேச்சன் என்னும் எண் பொருள்கள் கூறப்பட்டுள. இவற்றுள் ஈற்றயல் ஐந்தும் பிராமணர்க்குத் தென்னாட் ஏற்பட்டபின் தோன்றியவை.

ஏற்றம்

ஆசாரியனைக் குரவன் என்பதும், உபாத்தியாயனை ஆசிரியன் என்பதும் தமிழ்மரபு.

வடநாட்டு ஆரியர் பல்வேறு தொழிலரா யிருந்திருக்க லாமேனும், தென்னாட்டிற்கு வந்த ஆரியர் வேதமோதிப் பிழைத்த பிராமணரே. கி.பி. 7ஆம் நூற்றாண்டிலும், “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" (தேவா. 844 : 5) என்று திருநாவுக்கரசர் ஆரியரையும் தமிழரையும் வேறுபடுத்திப் பாடுதல் காண்க. முசலீம் மக்கள் தமிழ்நாட்டாரைப் 'பாமன் தமில்' (பிராமணன் தமிழன்) என்று பகுத்ததும் கவனிக்கத் தக்கதாம்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டிலெழுந்த மணிமேகலையில், பிராமணன் (ஆரியப் பார்ப்பான்) வடமொழியாளன் என்றும், பிராமணத்தி (ஆரியப் பார்ப்பனி) வடமொழியாட்டி என்றும் குறிக்கப்பட்டுள்ளனர்.

'வடமொழி யாளரொடு வருவோன் கண்டு"

(L0600fGLO.5:40)