60
வடமொழி வரலாறு
இதுகாறுங் காட்டப் பெற்றவை எடுத்துக்காட்டுச் சொற்களே. இவற்றினின்று, வேத ஆரியரின் முன்னோர் மொழி எவ்வாறு மேலை யாரிய மொழிகட்கு இனமாயிருந்த தென்பதைத் தெளிவாய்க் கண்டுகொள்ளலாம்.
பொதுவாக, மேலையாரிய மொழிக் குடும்பங்கட்குள் தியூத்தானியம் முந்திய நிலையையும், கிரேக்கம், சிலாவோனியம் முதலியவை பிந்திய நிலையையும் காட்டுகின்றன. இதனால், ஐரோப்பாவின் வடமேற்கோடியிலிருந்து தென்கீழ்க்கோடி நோக்கி ஆரிய மொழிகள் படிப்படியாய்த் திரிந்து வந்திருப்பதை அறியலாம்.
சில சொற்கள் இப் பொதுவியல்பிற்கு மாறாகத் தியூத் தானியத்தில் மிகத் திரிந்துள்ளன. இதற்கு அவை இந்தியாவினின்று முதலில் ஐரோப்பா சென்றுள்ளமையே கரணியம்.
எ-டு : எண்ணுப் பெயர்களும் சிலவுறுப்புப் பெயர்களும்.
ஆரிய மொழிகளுள் மிகத் திரிந்தது கீழையாரியம் என்பது முன்பு காட்டப்பட்டது.
ஒருசில தமிழ்ச்சொற்கள்
மேலையாரிய வழியாகவும்
நேரடியாகவும் வடமொழியிற் புகுந்துள்ளன.
எ -டு : ருத் (rudh) - மேலைவழி
ரக்த (அரத்த) - நேர்வழி
அரத்தம் என்னும் குருதிப் பெயரே பண்பியாகு பெயராக அதன் நிறத்தையுங் குறிக்கும்.
2. பிராகிருதச் சொற்கள்
மேலையாரியத்திலும் தமிழிலும் தென்திரவிடத்திலும் ல்லாத வேதமொழிச் சொற்களெல்லாம், பிராகிருதச் சொற்களே. எ-டு: ஆதி, கிராமம்.
3. வடமொழிப் புகுந்த தென்சொற்கள்
கீழ்வரும் சொல்லிணைகளில் இடச்சொல் தென்சொல்லும் வலச்சொல் வடசொல்லும் ஆகும்.
அக்கம்' - அர்க்க
அஃகல் = சிறிதாதல் (திவா.)
அஃகுதல் = சுருங்குதல், சிறுத்தல், நுண்ணிதாதல்.
அஃகு = அஃகம் = அக்கம் = 1/12 காசு.