பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

வடமொழி வரலாறு


அரசன்

ராஜன்


ம. அரசன், க. அரச, து. அரசு.

L. regis, rex, Kelt, rig, OG. rik, Goth, reiks, AS. rice, E. rich.

அரவணைத்தல் என்பது தழுவுதலையன்றிச் தழுவிக் காத்தலையே குறித்தலால், அரவணை என்னும் கூட்டுச் சொல்லின் முதலுறுப்பு, பாம்பைக் குறியாது காக்கும் வலிமையுள்ள உயர்திணையான் ஒருவனையே குறித்தல் வேண்டும். அகரம் பல சொன்முதலில் உகரத்தின் திரிபாயிருத்தலால், அரவு என்பது உரவு என்பதன் திரிபென்று கொள்ளுதல் தக்கதாம். உரவு வலிமை. வலி என்பது பண்பாகுபெயராய் வலிமையுள்ளவனையுங் குறிக்கும்.

"காய மனவசி வலிகள்

(மேருமந். 1097)

Authority என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக.

உலகில் வலிமை மிக்கவன் அரசனாதலின், உரவோன் என்னும்

சொல் அரசனையே சிறப்பாகக் குறிக்கும்.

"முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

பரந்துபட்ட வியன்ஞாலம்

தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ

யொருதா மாகிய வுரவோ ரும்பல்

(புறம்.18)

என்று பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது

காண்க.

வுகரவீறு சில சொற்களில் சுகர வீறாகத் திரிகின்றது.

எ-டு: ஏவு -ஏசு, பரவு - பரசு, விரவு - விரசு, துளவு - துளசு - துளசி.

இம் முறையில் அரவு என்பது அரசு என்றாயிற்று.

அரசு - அரசன். இச் சொல் குமரிக்கண்டத்தில் தலைக்கழகக் காலத்திலேயே தோன்றியதாகும். அகப்பொருளிலக்கணத்திற் குறிக் கப்பெறும் நால்வகை வகுப்பாருள் இரண்டாமவர் அரசர். அரசன் என்பது கிழவன், வேள், மன்னன், கோ, வேந்தன் என்னும் ஐவகைத் தலைவர்க்கும் பொதுப்பெயராம்.

"ஐவகை மரபின் அரசர் பக்கமும்'

என்னுமிடத்து, வேறு பெயர் பொருந்தாமை காண்க.

அரசன் - அரைசன் - அரையன். அரசு -அரைசு.

தெ.ராயலு, க.ராயரு, E. roy,

(தொல்.1021