பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

வடமொழி வரலாறு


வேண்-வேந் (இ.வே.)


வெள்-வெண்டு. வெள்- வேள்-வேண்-வேண்டுவேள் - வேட்பு வேட்கை. வேண்+அவா=வேணவா. வேணும் (உ.வ.) = வேண்டும்.

வெள்-வெள்கு-வெஃகு.

வேந் = பேரார்வங்கொள், ஏக்கமுறு .வே), பொறாமைப்படு (D). Co.).

தாது பாடம் இதை வேண் (பற்று, எடு) என்னும் சொல்லின் மறுவடிவாகக் கொள்வது பொருந்தாது.

வேலை -வேலா = கடல்

“வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாயிற்று" (பழமொழி) 2.சூழெல்லை.

வேல் - வேலை = 1. எல்லை.

2. நிலத்திற்கு எல்லையாக வுள்ள கடல்.

"வேலை நஞ்சுண் மழைதரு கண்டன்" (திருவாச. 6:46). 3. கடற்கரை (பிங்.). "பௌவ வேலை" (கந்தபு. மேருப். 46). வேளை - வேலா

வேலை = 1. எல்லை. காவலெல்லை, அமையம்.

ஒ.நோ: "கூறிய வெல்லையில்" (கம்பரா. விபீடண. 97). 2. காலம் (பிங்.)

"மணந்தா ருயிருண்ணும் வேலை” (குறள். 1221).

வேலை - வேளை=1. அமையம். எ-டு: வந்த வேளை நல்ல வேளை. 2. சிறுபொழுது. எ-டு: காலைவேளை.

3. பகற்பகுதி. எ-டு: இருவேளைப் பள்ளி.

4. நாட்பகுதி. எ-டு: பகல்வேளை, இராவேளை.

5. மருந்துண்ணும் நேரம். எ-டு: மூவேளை மருந்து.

6. நேரம், காலப்பகுதி. எ-டு: வேளைபார்த்து அனுப்பி வைக்க வேண்டும்.

வைகை-வேகவதீ

வைகுதல் = தங்குதல். வைகு-வைகை-தங்கிச் செல்லும் ஆறு. தங்கிச் செல்லுதலாவது மெல்லச் செல்லுதல்.

வையை யன்ன வழக்குடை வாயில்" (மதுரைக். 35: 6).

‘வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்” (புறம். 71).