பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

வடமொழி வரலாறு


3

இலக்கிய வதிகாரம்

வடமொழி என்பது ஒருகாலும் பேசப்படாத நூன்மொழியே யாதலின், அதன் வரலாறென்பது உண்மையில் இலக்கிய வரலாறே. 1.வேதம்

வடமொழியில் முதலாவது ஏற்பட்ட நூல் வேதம். அது முதலில் ருக் என்னும் ஒரே மறையாயும், பின்னர் இருக்கு, எசுர் (யஜுர்), சாமம் (ஸாம) என்னும் மும்மறையாயுமிருந்து, இறுதியில் அதர்வ வேதத்தொடு நான்காயிற்று.

வேதம் என்பது அறிவு அல்லது அறிவுநூல் என்று பொருள் படும். விழி-L-vide-ஆ (wit).வித்=அறி. வித் - வேதம். வேதம் நீண்டகாலமாய் எழுதப்படாது செவிவழக்காகவே வழங்கி வந்ததால், ச்ருதி என்றும் பெயர் பெற்றது. ச்ரு=கேள். ச்ருதி=கேள்வி. செவியுறு-ச்ரு.

வேதங்கள் மூன்றாயிருந்தபோது த்ரயீ எனப்பட்டன. இருக்கு வேதமே ஏனை மூன்றிற்கும் பெரிதும் சிறிதும் மூலமாம். அது ஏறத்தாழ 10,500 (10,402-10,622) மந்திரங்களைக் கொண்டது. அவற்றுள் ஏறத்தாழப் பாதியைக் கொண்டது எசுர்வேதம். சாமவேத மந்திரங்கள் 1549. அவற்றுள்78 நீங்கலாக ஏனையவெல்லாம் இருக்கே. அதர்வ வேதம் ஏறத்தாழ 6000 மந்திரங்களையுடையது. அவற்றுள் 1/3 பகுதிக்குமேல் இருக்காகும்.

இருக்குவேதம் பல்வேறு சிறுதெய்வ வழுத்துத்திரட்டு; எசுர் வேதம் பல்வேறு வேள்வி செய்யும் முறைகளைக் கூறும் பகுதித் திரட்டு; சாமவேதம் இசை வகுத்த இருக்கு மந்திரத்திரட்டு; அதர்வ வேதம் தெய்வவழுத்தும் வாழ்விப்பும் வசியமும் சாவிப்பும் கருமாற்றும்பற்றிய மந்திரத்திரட்டு. இது பொதுமக்களின் குருட்டு நம்பிக்கையைத் தழுவியது.

இருக்கும் சாமமும் செய்யுள் வடிவின; ஏனை யிரண்டும் செய்யுளும் உரைநடையும் கலந்தன.