பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

வடமொழி வரலாறு


காளிகம், சாம்பேசம், அங்கிரம், சௌரம், பராசரம், மாரிசம், பார்க்கவம்.

புராணங்களின் காலம் கி. மு. 11ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7ஆம் நூற்றாண்டுவரைப் பட்டதாகும்.

5. இதிகாசம்

(இதி-ஹ-ஆஸ = இப்படி உண்மையில் இருந்தது.)

இராமாயணம், மகாபாரதம் என இதிகாசம் இரண்டு.

மகாபாரதக் காலம் கி. மு. தோரா. 1000.

மகாபாரதத்தொடு தொடர்புடையது பகவற்கீதை. நால்வகை வரணத்தையும் அவற்றின் ஏற்றத்தாழ்வுடன் இறைவனே படைத்த தாக, கண்ணன் கூற்றில் வைத்து வலியுறுத்தப் பகவற்கீதை பயன் படுத்தப்பட்டுள்ளது. வியக்கத்தக்க அரசர் வரலாறு இதிகாசம். 6. ஆகமம்

வேதப் பிராமணர் தென்னாட்டிற்கு வந்தவுடன், மதக்கொண் முடிபு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் முதலியன பற்றிய நூல்களை அமைத்துக்கொண்டனர். அவை சிவநெறி பற்றியவாயின் ஆகமம் என்றும், திருமால் நெறி பற்றியவாயின் ஸம்ஹிதை யென்றும், சாக்தம்பற்றியவாயின் தந்த்ரம் என்றும் பெயர் பெறும். ஆகம = வந்தது, தோன்றியது, வழிவந்த நூல்.

7. பல்வகை நூல்கள்

=

பாணினீயம் (அக்ஷ்டாத்யாயீ) இயற்றப் பெற்றது, கி. மு. 5ஆம்

நூற்றாண்டு.

அர்த்த சாஸ்திரம் சாணக்கியரால் இயற்றப்பெற்றது, கி.மு. 3ஆம் நூற்றாண்டு.

பிற்காலத் தர்ம சாஸ்திரங்கள்

மநுதர்ம சாஸ்திரம் (கி.பி. 200), யாக்ஞவல்கிய ஸ்மிருதி (கி.பி. 408), நாரத ஸ்மிருதி (கி.பி. 500).

காவியம்

வடமொழி முதற்காவியம் வான்மீகி யிராமாயணம். அது மகா பாரதத்திற்கு முந்தியது.

கவியினாற் செய்யப் பெற்றது காவியம் (காவ்ய).