பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

வடமொழி வரலாறு


வடமொழி பேச்சுமொழி யன்றாயினும், பிராமணர் தம் கூட்டரவியல் மேம்பாட்டைப் போற்றிக் காக்க, இன்றும் அதில் நூலியற்றியும் கட்டுரை வரைந்தும் திருமுகம் விடுத்தும் வரவேற் பிதழ் படித்துக் கொடுத்தும் வருவது, அவரது ஒப்புயர்வற்ற மொழி வெறியை விளக்கிக் காட்டுகின்றது.

வடநூல்கள் தோன்றத் தோன்றத் தென்னூல்கள் மறைந்து கொண்டே வந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான தென்மொழித் தொன்னூலெல்லாம் இறந்துபட்டபின், வடமொழிப் பெயர்ப்பு நூலும், புது நூலும், முதுநூலும், மூலநூலும்போற் காட்சியளிக் கின்றன. இது, கதிரவன் கரந்தபின் திங்கள் திகழ்வ தொத்ததே.

வடமொழி தமிழகத்தில் தமிழாலேயே வளர்ந்ததென்பதை, வடமொழிச் சொற்களும் வியாகரணங்களும் இசைநட கணிய மருத்துவ நூல்களும், சிவ திருமால் நெறிகளும் மட்டுமன்றி, சிறந்த வடநூலாசிரியர் பலர் தமிழ்நாட்டாரா யிருந்ததும், 14ஆம் நூற்றாண் டில் வேதங்கட்கு விளக்கவுரை வரைந்த சாயனாச்சாரியார் தென்னாட்டாரா யிருந்ததும், இன்றும் தலைசிறந்த வடமொழிப் பண்டிதர் தமிழ்நாட்டாரா யிருப்பதும், தெள்ளத் தெளியக் காட்டும்.

வடமொழிப் பட்டாங்கு நூல்களில், பெருந்தொடரியம் (மஹா வாக்ய) எனப் பறைசாற்றப்பெறும் தத் த்வம் அஸி என்னும் சொற்றொடரே, முற்றுந் தமிழ்த்திரிபாயிருந்து வடமொழி யாளரைத் தலைகவிழச் செய்கின்றது.

தான்-தத், நூம்-நும்-தும்-த்வம், இரு-இஸ் (தியூத்.)-எஸ் (இலத், கி)-அஸ் (வ.), தி (முன்னிலையொருமையீறு)-R.

தான் என்பது முதற்காலத்திற் படர்க்கையொருமைச் சுட்டுப் பெயராயிருந்து, பின்பு தற்சுட்டுப் பெயராயிற்று.