158
வடமொழி வரலாறு
18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிரயோக விவேகம், தமிழ்ச் சொல்லிலக்கணம் முழுவதையும் மறைக்க முயன்ற சிறு கேது.
இந் நூற்றாண்டில் ஏறத்தாழ நாலரை யிலக்கம் உருபா செல வழித்து முப்பதாண்டாகத் தொகுக்கப்பட்ட சென்னைப் ப. க. க. த. அகரமுதலியில், ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள் விடப்பட்டுள; அடிப்படைத் தமிழ்ச்சொற்க ளெல்லாம் ஆரியச் சொற்களாகக் காட்டப்பட்டுள; வேண்டாத ஆயிரக்கணக்கான அயற்சொற்கள் தமிழ்ச்சொற்களாக இடம்பெற்றுள; தமிழ்ச்சொற்கட்குத் தரப்பட்டுள பொருள்கள் முற்றுப்பெறா திருப்பதொடு, ஆங்காங்கு வழுவாகவும் உள. பல தமிழ்ச்சொற்கள் தொடர்பற்ற ஆரியச் சொற்களொடு தொடர்புபடுத்தப்பட்டுள.
எ-டு:
அச்சன்-ஆர்ய, ஐயன்-ஆர்ய, அந்தரம்-அந்தர, அம்பலம்- அம்பர, ஆகுளி-ஆகுல, ஆசிரியன்-ஆசார்ய (c), ஆமை (வடை)- ஆம் (வடா), உல்லரி-வல்லரி, ஏடன்-சேஷ, ஏணி, சேணி- ச்ரேணி, ஓரை-ஹோரா, கம்பம்-ஸ்தம்ப, கும்மாளம்-குமால, கெஞ்சு-கஞ்ச் (kh), சட்டன்-சத்த்ர (ch), சடங்கு-ஷடங்க (d), சாரி - சாரி (c), சம்பளம் -சம்பல, சரி-ஸத்ருச, சாலி-சாலி, சுணை- ஸ்மரண, சும்பன்-சும்பன (c), சேந்தன்-ஜயந்த, தச்சன்-தக்ஷ (d), தகழி-ஸ்தாலீ, தாயம்-தாய (d), தாலி-தாலீ, திசை-திசா, நயம்- நீதி(t), நாயகன்-நாயக, பட்டி(மண்டபம்)-பட்டி
(விக்கிரமாதித்தன் மந்திரி). பரண்-பரண (bh), பரத்தன்-பரஸ்தா, பார்ப்பனன்-ப்ராமண (b), புடவி-ப்ருத்வீ, மஞ்சள்-மஞ்சிஷ்டா, மாரி-மாரி, வரி-பலி (b). வயம்-வச, வல் (விரைவு)-வல், வாசி-வாச்
(c).
ம்
அம்மணம்
ஆடையில்லா வுடல்நிலையைக் குறிக்க, அற்றம் என்னும் இலக்கிய வழக்குச் சொல்லும் அம்மணம், முண்டம், மொட்டைக் கட்டை என்னும் உலக வழக்குச் சொற்களும், தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன.
இவற்றுள்,அம்மணம் என்னும் சொல் சமணம் என்பதன் திரிபாகச் சென்னைப் ப. க. க. த. அகரமுதலியிற் காட்டப்பட்டுளது. சமணம் என்பது ச்ரமண என்னும் வடசொல்லின் திரிபு.
ச்ரம் (ஏ. வி.) = களை, அயர், சோர், சலி, உழை, வெட்டிவேலை
செய்.
ச்ரம (பெ.)
=
களைப்பு, அயர்வு, சோர்வு, உழைப்பு, மெய்வருத்தம், ஓகப்பயிற்சி, தவம், உடம்பை வாட்டல்.