பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மறைப்பதிகாரம்

163


மரபு.

பட்டுதல் = அடித்தல். பட்டசாலை = சுத்தியலால் அடிக்குங் கூடம். தருக்கத்தில் எதிரி கூற்றை மறுத்தலை வெட்டிப் பேசுதல் என்றும், அடித்துப் பேசுதல் என்றும் கூறுவது பட்டிமண்டபம் = சமயக் கணக்கர் எதிரிகள் கூற்றையடித்துத் தம் கோளை நிறுவும் மண்டபம். விக்கிரமாதித்தனின் மந்திரியாகிய பட்டியின் பெயரால் ஏற்பட்ட மண்டபம் என்பது எள்ளி நகையாடத்தக்கது.

நால்வகுப்பாருள் அந்தணர் ஐயரும் பார்ப்பாரும் என இருவகையர். முன்னவர் துறவியர்; பின்னவர் இல்லறத்தார். இவருள் சிறப்பாக அந்தண்மையுடையவர் துறவியர். இவ்விரு வகையரும் ஆரியர் வருமுன் தமிழரே. நூல்களைப் பார்க்கின்றவன் பார்ப்பான். இது செய்வான் வாய்பாட்டது. பார்ப்பனன் என்பது செய்வனன் வாய்பாட்டது. பிரமத்தை யறிந்தவன் பிராமணன் என்பர். இவ்விரு சொல்லையும் ஒன்றாக இணைப்பது, பிராமணரின் தமிழ்ப் பகைமை யையே காட்டுகின்றது.

மடம்

மடுத்தல் = உண்ணுதல். மடு-மடை = உணவு. மடைத்தொழில் = சமையல் தொழில். மடையன் = சமைப்போன். மடைப்பள்ளி = சமையலறை அல்லது சமையல் மனை. மடைநூல் = சமையற்கலை நூல்.

மடு-மடம் = அறவுணவுச்சாலை, துறவியரும் இரப்போரும் உண்டு தங்கும் இடம், சமயச் சார்பான துறவியர் விடுதி, துறவியர் கல்லூரி.

தமிழகத்திற் பேரூர்தொறும் மடமுண்டு. அதில் பண்டாரம் பரதேசி என்னும் ஆண்டிகளும் இரப்போரும் அயலூர் எளியாரும் தங்குவர்."ஆண்டிகள் கூடி மடங்கட்டினாற்போல்" என்பது பழமொழி. ஆண்டிமடம் என்பது பெருவழக்கு.

செல்வப் பெற்றோர், தமக்கடங்காது தம்மைவிட்டுப் பிரிந்து சென்ற மக்கள் பல்லாண்டு கழித்துத் தம்மூர் மடத்திற்கு வந்து தங்குவாராயின், தம் உறவைக் காட்டிக்கொள்ளாதே அவர்க்கு இரவில் நல்லுணவளிப்பது வழக்கம். அதற்கு 'இராமடம் ஊட்டுதல்’ என்று பெயர்.

வடமொழியில் மடம் என்னும் தென்சொல் மட (matha) என்று திரியும். அதற்கு,

66

"a hut, cottage, (esp.) the retired hut (or cell) of an escetic (or student),......a cloister, college (esp. for young Brahmans), temple...” என்று மா.வி.அ.