பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மறைப்பதிகாரம்

167


ஆனந்தத்தைத் தரும் நூலை இயற்ற வேண்டுமெனத் தேவர்கள் பிரும்மாவை வேண்ட, அவர் அதனை இயற்றினர். ஆங்குக் கூறப்படும் பொருள்களை ருக்வேதத்திலிருந்தும், கீதிகளை ஸாமவேதத்திலிருந்தும், அபிநயங்களை யஜுர் வேதத்திலிருந்தும், ரஸங்களை அதர்வ வேதத்திலிருந்தும், அவர் கொண்டனர். அதற்கு நாட்ய வேதம் எனப் பெயர். அதனை நடிக்கத் தேவர்களால் இயலாமையான், பரத முனிவரைத் தம் நூறு புதல்வரைக் கொண்டு நடிக்குமாறு பிரும்மா ஏவினர். முதலில் அம்ருத பந்தனம் பரதரால் பிரும்மாவின் முன்னர் நடிக்கப்பட்டது. பின்னர் த்ரிபுரதாகம் சிவபிரானின் முன்னர் நடிக்கப்பட்டது (பக். 536-7) என்று வரைந்திருப்பதும், இத்தகைய செய்திகள் நிறைந்த நூல் அண்ணா மலை பல்கலைக்கழகத்தால் இவ் விருபதாம் நூற்றாண்டில் வெளி யிடப்பட்டிருப்பதும், இதற்கு அங்குள்ள தமிழ்ப் பேராசிரியர் தடை நிகழ்த்தாதிருப்பதும், தமிழரின் அடிமைத்தனத்தையே காட்டு

கின்றன.

பர். P.S. சு.சாத்திரியார் கிழவன் என்னும் சொல் முதலில் உரியவனைக் குறித்து இன்று முதியவனைக் குறிக்கின்றதென்று, தம் தமிழறியாமையைப் புலப்படுத்தியுள்ளார்.

இன்றும் அச் சொல் அவ் விருபொருளையும் உணர்த்தும். உரியவன் என்னும் பொருளில் கெழு என்னும் அடியினின்றும், முதியவன் என்னும் பொருளில் கீழ் என்னும் அடியினின்றும், அது திரிந்ததாகும்.

குழு-கெழு-கெழுமை-கிழமை = உரிமை.

கீழ்-கிழம்-கிழமை = முதுமை.

திரு. சாம்பமூர்த்தி ஐயர் தம் 'இந்திய இன்னிசை வரலாறு' (His- tory of Indian Music) என்னும் நூலில், சாமவேத இசைக்கோவையே இந்திய இசைக்கோவைகட்குள் முந்தியது எனக் கூறியுள்ளார்.

பர். சு. கு. சட்டர்சியும், பர். S. M. கத்திரேயும் இந்தியத் திணை யியற் களஞ்சியத்தில் (Gazetteer of India) மொழிகள் (Languages) என்னும் 7ஆம் அதிகாரத்தில், தமிழிலக்கியம் கிறித்தவ வூழியில் தொடங்கிய தென்றும், திருவள்ளுவர் காலம் கி. பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதன்றென்றும், இருளரும் காடரும் தம் ஆப்பிரிக்க மொழியை மறந்துவிட்டுத் தமிழைப் பேசி வருகின்றனரென்றும் வரைந்துள்ளனர்.

இனி, பர். சட்டர்சி தமிழர் கிரேக்க நாட்டினின்று வந்தவரென்றும் ஸந்தி, ஸஹஸ்ர, கன்யகா, ஸ்தூணா, ஸ்த்ரீ, துலஸீ, லோக, பிராஹ்மண, த்ரோணீ, ஸ்நேக, தேச முதலிய வடசொற்கள்,