பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




170

-

வடமொழி வரலாறு

8. ஆரிய ஏமாற்றிற் காளா யடிமைமடப் பூரிய வாழ்வழுந்திப் போந்தமிழா சீரிய செந்தமிழ் மானஞ் சிறந்துரிமை பெற்றுயர்க முந்திய தென்னோர் முறை. 9.ஒருமுறை யேமாறின் ஏமாற்றி குற்றம் மறுமுறை யேமாறி குற்றம் - பலமுறையும் ஏமாறும் பேதை யியல்பன் தமிழனெனின் ஆமாறே யில்லை யறி.

10. மொழியே யினமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்காண் முன்போல் தமிழுயரத் தானுயர்வான் தான்.

11. பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி

மிகுத்ததனா லில்லையொரு மேன்மை -வகுத்தநன்னூற் கற்றைகளைத் தின்றாலுங் காளவாய் நல்லறிவு பெற்றிடுமோ எத்துணையும் பேசு.

12.உடம்பளவில் மாந்தர் உயர்திணைய ராகார் மடந்தவிரும் நல்லறிவு மானம் - திடம்பெறவே தாழ்வுணர்ச்சி நீங்கித் தகுநற் றொழிலொழுக்கம் வாழ்வுயர்ச்சி காணும் வழி.

13. அடிமைத் தனத்தின் அடிநீக்கி யின்றே குடிமைத் தனந்தமிழா கொள்க மடிமை இருக்குந் தமிழையும் இல்லாத தாக்கும் தருக்கும் பெயருந் தப.

14. செங்கதிரின் நீண்மறைவிற் செந்தமிழும் ஆரியத்தால் மங்கி மறைந்தநிலை மாய்ந்ததினால் - எங்குமினி மூல மொழியென முத்தமிழே யாளுகின்ற

கால மணுகியதே காண்.

15. குப்பை யுயர்ந்தது கோபுரந் தாழ்ந்ததெனத் தப்பி வடமொழி தான்கவர்ந்த செப்பத்

-

தமிழணையை விட்டினித் தானதற்குத் தாழ்க குமரியனை யென்றதைக் கொண்டு.

16. மறைமலை மாணடிகள் மாபெயர் வாழி

நிறைமொழி முத்தமிழ் வாழி - இறைமொழியான் என்னும் வடமொழியும் ஏமாற்றா தெந்நிலத்தும் மன்னுக நூன்மொழி மற்று.