பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

தி.பி.1988 (1957)

தி.பி.1990 (1959)

தி.பி.1991 (1960)

தி.பி. 1992 (1961)

தி.பி. 1994 (1963)

தி.பி. 1995 (1964)

தி.பி. 1997 (1966)

தி.பி. 1998(1967)

தி.பி.1999 (1968)

வடமொழி வரலாறு

திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட ‘தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது.
தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத் தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித் தமைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப் பட்டது.

"சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு" - நூல் வெளியீடு.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார்.

துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு.
முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - "தமிழ்ப் பெருங் காவலர்" என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

ce

'என் அண்ணாமலைநகர் வாழ்க்கை " என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது.

"இசைத்தமிழ்க் கலம்பகம்

""

"பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்"

"The Primary Classical Language of the World" 6T60T 60LD நூல்கள் வெளியீடு.

"தமிழ் வரலாறு

""

'வடமொழி வரலாறு

""

"The Language Problem of Tamilnadu and Its Logical Solution" ஆகிய நூல்கள் வெளியீடு.

மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணி விழாவைக் கொண்டாடி “மொழிநூல் மூதறிஞர்” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு "உலகத் தமிழ்க் கழகம்” தோற்றுவிக்கப்பட்டது.

"இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?" "வண்ணனை மொழிநூலின் வழுவியல்'

``Is Hindi the logical solution of India" ஆகிய நூல்கள் வெளியீடு.