பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

வடமொழி வரலாறு


நிலையம் - நிலய


நில்-நிலை-நிலையம் = 1. நிற்குமிடம், தங்குமிடம், இருப்பிடம். “நியாயமத் தனைக்குமோர் நிலைய மாயினான்” (கம்பரா. கிளை. 55) 2.கோயில்.

"நல்லூரகத்தே திண்ணிலையங் கொண்டு நின்றான்

""

(தேவா. 414:5), (திவா.)

'அம்' ஒரு பெருமைப்பொருட் பின்னொட்டு. நிலை = நிற்கும் சிற்றிடம் (stand). எ-டு: கதவுநிலை, தேர்நிலை. நிலையம்-நிற்கும் பேரிடம் (station). எ-டு: புகைவண்டி நிலையம். வடவர் நி + லய என்று பகுத்து, ஒன்று இன்னொன்றோடு ஒன்றிவிடும் இடம் என மூலப் பொருள் கூறுவர்.

=

G = கீழ். லீ ஒட்டு.லீ-லய -டு. லீ-லய = ஒட்டுகை. நிலீ = கீழ்த் தங்கு, படிந்திரு. நிலைத்திரு. நிலய = தங்கிடம், இருக்கை, குடியிருப்பு, குகை,கூடு.

தென்சொல்லை வடசொல்லாகக் காட்ட வேண்டி, அதை வடவர் செயற்கை முறையிற் சிதைப்பதற்கு இஃதோர் எடுத்துக் காட்டாம். தம் கொள்கையை நிறுவவே, நிலையம் என்னும் சொல் வருமிடமெல்லாம் நிலயம் என்றே எழுதுவர், அல்லது பதிப்பிப்பர்.

நீரம்-நீர

நீள் - நீர் = நீளும் பொருள். நீர் x நிலம். நில்-நிலம் = நிற்கும் பொருள்.

நீர் - நீரம் - ஈரம். நீர் - ஈர். ஈர்மை = தண்மை. எ-டு: ஈர்ங்கதிர், ஈர்ங் கை.

நீலம் - நீல

நீர்-நீல் = நீலம்.

நீர்நிலைகட்குள் கடலே பெரிதாகவும் ஏனையவற்றிற் கெல்லாம் மூலமாகவு மிருப்பதால், நீர் என்னும் சொல் சிறப்பாகக் கடலையே குறிக்கும்.

""

"நீரொலித் தன்ன நிலவுவேற் றானை

(மதுரைக். 369)

கடல்நிறம் நீலமா யிருப்பதால், நீர் என்னும் சொல்லினின்று

நீலக்கருத்தும் நீல் என்னும் சொல்லும் பிறந்தன.