பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

வடமொழி வரலாறு


வலி இடைமிகாதே பல கூட்டுச் சொற்கள் அக்காலத்து வழங்கி வந்தன.

எ டு: மாரிகாலம், கார்காலம்.

-

பந்தி என்பது பத்தி என்பதன் மெலித்தல் திரிபே.ஆயின், வடவர் பஞ்சன் (c) என்பதனொடு தொடர்புபடுத்திப் பச் (c) என்பதை மூலமாகக் காட்டுவர். அதன் விளக்கம் வருமாறு:

பச் அல்லது பஞ்ச் = விரி, கைவிரி.

பஞ்ச் - பஞ்சன் = விரித்த கையிலுள்ள ஐந்து விரல், ஐந்து. பஞ்சன் - பங்க்தி = ஐம்பொருள் தொகுதி அல்லது வரிசை, தாகுதி, வரிசை, கூட்டம்.

வடவர்

அமையும்.

ஏமாற்றுக்கலையைக்

காட்ட இஃதொன்றே

பப்படம் பர்ப்பட (t)

அப்பளித்தல் = சமனாகத் தேய்த்தல். சுவரை அப்பளித்துப் பூசுகிறான் என்னும் வழக்கை நோக்குக.

பரம்

பரமன்

=

அப்பளி - அப்பளம் = சமனாகத் தேய்த்தமைக்கும் உழுத்தமா வட்டம்.

"மேவுகபந் தீர்க்குங்காண் ஓதுமுழுந் தப்பளம்'

(பதார்த்த.

1426)

தெ. அப்பளமு - அப்படமு, க. அப்பா - பப்பள, ம. பப்படம்.

பர

-

பரம

புரம் நகர்.

=

மேல், மேன்மாடம், உயர்ந்த கோபுரம், கோபுரமுள்ள

புரை = உயர்வு. "புரையுயர் வாகும்" (தொல். 785) புரம் பரம் = 1. மேல், மேலிடம்.

"அகிற்புகை....பரங்கொடு போகி" (இரகு. நகர. 4).

2. மேலுலகம்."இகபர மாகி யிருந்தவனே" (திருவாச.4:50) 3.மேலானது."விரதமே பரமாக" (திருவாச. 4:50)

4. வீடு (மோட்சம்) (பிங்.).

5. மேலோன், கடவுள். “காணலாம் பரமே" (திருவாச. 5: 44) பரம் - பரமன் = கடவுள்.

'மாநட மாடும் பரமனார்"

(தேவா. 600:1)