பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

வடமொழி வரலாறு


பெரு(கு) - ப்ருஹ் (b) - (இ.வே.).

பல் - பரு - பெரு - பெருகு.

பெருங்கதை ப்ருஹத் கதா.

பெருவுடையார் = ப்ருஹத் ஈஸ்வர

பே ✩ (bh)

பேம்

பேபே என்பது அச்சக் குறிப்பு.


பே = அச்சம். "பேஎமுதிர் கடவுள்” (குறுந். 87).

பே - பேம் = அச்சம்.

பேம்நாம் உரும்என வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள

""

பே - பேய் = அச்சம், அஞ்சப்படும் ஆவி. பே - பீ - பய = அச்சம்.

பேன (ph)

பே

= நுரை (பிங்.). பே - பேம் = நுரை.

(தொல்.848)

"பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை" (இறை.கள்.7, உரை). அச்சத்தினாற் பேய்கோட்பட்டவன் வாயில் நுரை தள்ளுவது யல்பாதலால், அச்சக் கருத்தினின்று நுரைதள்ளற் கருத்துத் தோன்றியிருக்கலாம். பேம் அச்சம்.

OHG. feim, OE. fam, E. foam.

பேசு

-

பாஷ் (bh)

பே - பேசு. பேசுதல் = உதடசைத்துச் சொல்லுதல், மொழிதல், உரையாடுதல். பகரம் இதழ்ப் பிறப்பினது.

பேசு-பேச்சு = சொல், உரை, சொற்பொழிவு, மொழி.

பேழை பேட (t)

பொத்தகம்

-

புஸ்தக

புல்லுதல் = பொருந்துதல். புல் -பொல் - பொரு-பொருந்து - பொருத்து - பொத்து பொட்டு.

-

பொத்துதல் = பொருத்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல்.

பொத்து - பொத்தகம் = பொத்திய (சேர்த்த) ஏட்டுக் கற்றை, எழுதிய ஏட்டுத் தொகுதி.