பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

47


கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்பன தொன்றுதொட்ட வழக்கு.

மண்டலம்-மண்டலி.

மண்டலித்தல்

=

வட்டமாதல்,

வட்டமாகச் சுற்றிவருதல், ஈறு தொடங்கியில் (அந்தாதியில்) ஈறும் முதலும் ஒன்றித்து வருதல்.

மண்டலி =

வட்டமான பொறிகளுள்ள பாம்பு.

மண்டலம் - மண்டிலம் = 1. வட்டம். 2. வட்டமான இடம். "பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்" (புறம். 30).

3. வட்டமான கதிரவன்.

"பகல்செய் மண்டிலம்" (பெரும்பாண். 442).

4.வட்டமான திங்கள். “செய்வுறு மண்டிலம்" (கலித்.7). 5.வட்டமான கண்ணாடி.

"மையறு மண்டிலம்" (மணிமே. 25 :137).

6. வட்டமான ஞாலம்."கடல்சூழ் மண்டிலம்" (குறுந்.300). 7. ஞாலப்பகுதியான நாடு, நாட்டுப்பகுதி.

“மண்டிலத் தருமையும்" (தொல். பொருள். 41).

8. கூத்தின் மண்டில நிலை.

9. வட்டமாயோடுகை.

"

"செலவொடு மண்டிலஞ் சென்று" (பு. வெ. 12, வென்றிப். 14)

10. வட்டமாயோடுங் குதிரை (பிங்.).

"மண்டிலங் கொட்பு" (இன்னா. 35).

11. அளவடி. “மண்டில யாப்பும்" (தொல். 1372).

12. செய்யுளின் எல்லாவடியும் அளவொத்து வருதல். எ-டு : நிலைமண்டில வாசிரியம், மண்டிலம் (விருத்தம்). மண்-மணி = நாழிகைவட்டில், மணியடிக்கும் வட்டமான வண்கலத்தட்டு, மணியென்னுங் கால அளவு, உருண்டை, உருண்டையான விதை.

இச் சொற்கு வடமொழியில் இத்தகைய வரலாறுமில்லை; மூலமுமில்லை.

மணி-மணி (இவே.).

மண்ணுதல்

=

கழுவுதல்; மண்-மண்ணி-மணி = க கழுவப்பெற்ற

ஒளிக் கல். “மண்ணி யறிப மணிநலம்" (நான்மணி. 5)

வடமொழியில் ச் சொல் அகரமுதலிகளில் மட்டும்

உளதென்று மா. வி . அ. குறித்திருத்தல் காண்க.