பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

வடமொழி வரலாறு


மதி-மதிரை-மதுரை = மதிக்குலத்தவனான பாண்டியன் முதல்

தலைநகர் (தென்மதுரை), கண்ணன் ஆண்ட வடமதுரை, அப் பெயர் பெற்ற கடைக்கழகப் பாண்டியர் தலைநகர் (வைகைமதுரை).

சிவபெருமான் தம் சடைமுடியிலுள்ள திங்களினின்று மதுவைப் பொழிந்த இடம் (வைகை) மதுரை எனப்பெற்றது என்றும், மது என்னும் அரசன் ஆண்டதினால் மதுபுர என்று ஏற்பட்ட பெயர் மத்ரா (வடமதுரை) எனத் திரிந்ததென்றும் காரணங் காட்டுவர்.

மந்திரம்'-மந்த்ர (இ.வே.)

முன்னுதல் = கருதுதல். முன்-மன். மன்+திரம்(திறம்) = மந்திரம். எண்ணத்தின் திண்மையினால் எண்ணியவாறு நிறைவேறும் எண்ணம் அல்லது கூற்று அல்லது பாட்டு மந்திரமாம்.

'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்"

மந்திரம் = 1. எண்ணம் (பிங்.).

(குறள் 666)

2. சூழ்வினை 3. சூழ்வினைஞர் (மந்திரிமார்) அவை. "மன்னவன் றனக்கு நாயேன் மந்திரத் துள்ளேன்" (கம்பரா. உருக்காட். 34).

3. கொண்முடிபு (சித்தாந்த) மந்திரநூல்.

"போகமிகு மந்திரமா மறையொன்று" (திருமுறை. கண். 26). 4. சாவிப்புக் கூற்று.

மந்திரம்-மந்திரி = அரசனுக்குச் சூழ்வினைத் துணையாயிருப்

பவன்.

மந்திரக்காரன் = சாவிப்பு மந்திரம் பண்ணுபவன்(மந்திரவாதி). மந்திரம்-மந்திரி. மந்திரித்தல் = (செ. குன்றாவினை) 1. மந்திரத்தால் அடக்குதல்.

2. மந்திரத்தால் ஆற்றலுண்டாக்குதல்.

3. மந்திரத்தால் ஊழ்குதல்(தியானித்தல்).

"மந்திரிப்பார் மனத்து ளானை

(தேவா: 590:4)

4. கூடிச்சூழ்தல். "மகட்பேசி மந்திரித்து" (திவ். நாய்ச். 6: 3). 5. மந்திர மன்றாட்டுச் செய்தல்.

"சிரத்தினஞ் சுற்ற பின்னை மீண்டிட மந்திரிப்பார்"

(LLITE. 5: 7)