பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

வடமொழி வரலாறு


=

மழ-மழுகு. மழுகுதல் = மொட்டையாதல், மழுங்குதல்.

"நுதிமுக மழுகிய...வெண்கோட்டு" (அகம். 24).

மழுகு-மழுக்கு-மழுக்கம்

மொட்டை, கூரின்மை.

மழுகு-மழுங்கு. மழுங்குதல் = 1. கூர்நீங்கி மொட்டையாதல்.

"நுதிமழுங்கிய" (புறம்.4).

1. மதிக்கூர்மை குறைதல்.

“உதிக்கின்ற புத்தியும் மழுங்கிடும்" (திருவேங். சத. 15). மொழு-மோழல் = மொட்டை மூஞ்சியுள்ள பன்றி (பிங்.). மொழு - மோழை = 1.மொட்டை. 2. கொம்பிலா மாடு. “ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்" (பழமொழி). 3. மரத்தின் அடிமுண்டம். 4. மடமை.

5. நொய் சேராத கஞ்சி.

மொட்டைக் கூழ் என்னும் வழக்கை நோக்குக. மோழைமுகம் = பன்றி.

முள்-முண்-முண்டு-முண்டம் = 1. மழித்த தலை. "சடையு முண்டமுஞ் சிகையும்" (அரிச். பு. விவாக. 2). 2. வழுக்கைத்தலை. 3. அம்மணம்.

முண்டக்கட்டை = மயிரில்லாத் தலைபோல் ஆடையில்லா வுடம்பு. 4. தலையில்லா வுடம்பு.

முண்டம் - முண்டன் = 1. மழித்த தலையன்.

"கண்டராய் முண்ட ராகி" (தேவா. 269: 3).

2. அமணன். 3. மஞ்சிகன் (நாவிதன்).

முண்டன்-முண்டை (பெ.பா.)=தலைமழித்த கைம்பெண், கைம்பெண்.

முண்டை-முண்டைச்சி (இரட்டைப் பெ. பா.)

முண்டு-முண்டி. முண்டித்தல் = தலையை மொட்டையடித்தல். "தலைமுண்டிக்கு மொட்டரை” (தேவா. 423: 4).

முண்டி = மழித்த தலையன், மஞ்சிகன்.

முண்டி+அனம்

=

முண்டனம் (தலைமழிக்கை).

மொள்-மொட்டு = மொட்டை, கூரின்மை. "மொட்டம்பு" (பிங்.).

மொட்டு-மொட்டம். மொட்டந்தலை

=

மொட்டைத்தலை.

"மொட்டந் தலையிற் பட்டங்கட்டி யாள வந்தானோ?"