பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

75


"வக்காவு நாரையுங் கொக்கும் படுக்கவே" (குற்றா. குற. 93 : 2). வக்கா-வங்கா = பறவை வகை.

“வங்காக் கடந்த செங்காற் பேடை" (குறுந். 151).

வங்கு-வக், வங்க்

"

வள்-வண்-வணம்-வணர் = வளைவு, யாழ்க்கோட்டின் வளைந்த

பகுதி.

வணர்-வணரி = வளைதடி.

வளைந்த கத்தி. வணங்குதல்

வணம் - வணங்குவாங்கு-வங்கு-வங்கி

=

நெளிவளையல்,

வளைதல்.

வணக்கம் = வளைவு. “வில்வணக்கம்” (குறள். 827).

வாங்கு = வளைவு. வாங்குதல் = வளைதல்.

"வாங்குகதிர் வரகின்" (முல்லைப். 98).

வாங்கு-வாங்கா = வளைந்த ஊதுகருவி. வங்கம் = வளைவு, ஆற்றுவளைவு.

வஞ்சி -வஞ்ச்

வங்கு-வஞ்சு-வஞ்சி. ஒ. நோ: அங்கு-அஞ்சு. பொங்கு-பொஞ்சு. வஞ்சி-வஞ்சம், வஞ்சகம், வஞ்சனம், வஞ்சனை.

வஞ்சு = வஞ்சகம். “வஞ்சே வல்லரே" (தேவா. 828: 3).

-

வஞ்சகம் - வஞ்சக

வஞ்சனம்-வஞ்சன

இரு மொழியிலும் வங்கு என்பதே மூலம். ஆயின், வடவர் வக்கு (வக்) என்னும் வலித்தல் வடிவிற் காட்டுவர். இதினின்றே வக்ர, வக்ரீகரண முதலிய வடசொற்கள் பிறக்கும்.

ஒருவனை ஏமாற்றுவது வட்டஞ் சுற்றி அவனை வளைவது போலிருத்தலால், வளைதற்கருத்தில் ஏமாற்றுக் கருத்துப் பிறந்தது. Circumvent என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக.

வட்டம்-வ்ருத்த (இ.வே.)

வல்-வள்-வட்டு-வட்டம் = 1. வளைவு.

“வில்லை வட்டப்பட வாங்கி" (தேவா. 5 : 9).

2. வளைதடி. “புகரினர்சூழ் வட்டத்தவை” (பரிபா. 15 : 61). 3.வட்டவடிவம். 4. கதிரவனை அல்லது திங்களைச் சுற்றிய கோட்டை