பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

வடமொழி வரலாறு


வட்டு = வட்டமான சில், வட்டமான சூதாட்டுக் கருவி, வட்டமான கருப்புக்கட்டி.

இவ் வடிவம் வடமொழியில் இல்லை.

வட்டை = சக்கரத்தின் சூட்டு, வட்டகை. பிரா. வட்டா.

வ் வடிவம் வடமொழியில் இல்லை.

வடகம்-வடக (t)

வட்டம்-வடம்-வடகு-வடகம்

=

அரைத்த பருப்புடன்

கறிச்சரக்குச் சேர்த்துலர்த்திய தாளிப்புருண்டை

வடம்-வட (t)

வட்டம்-வடம் = 1. வட்டமாகப் பரவும் ஆலமரம். “வடநிழற்கண் ணூடிருந்த குருவே” (தாயு. கருணா. 41).

2. உருண்டு திரண்ட கயிறு.

கமலை (கம்மாலை) வடம், தேர்வடம் முதலியவற்றை நோக்குக.

3. உருண்டு திரண்ட பொற்கொடி அல்லது மணிக்கோவை.

"Vața, m. (perhaps Prakrit for vrita, `surrounded, covered"

என்று மா. வி. அ. குறித்திருத்தல் காண்க.

வடவை - வடபா (b) வடவா, படவா (b) படபா (b, b).

வடம்-வடவை = வடதிசை நெருப்பு (Aurora borealis). “வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து" (தனிப்பாடல்).

வடவனல் = வடவை.

“அக்கடலின்மீது வடவனல் நிற்கவிலையோ" (தாயு. பரிபூர9). "வெள்ளத் திடைவாழ் வடவனலை” (கம்பரா. தைலமா. 86).

வடவனலம் = வடவை.

“கடுகிய வடவன லத்திடை வைத்தது” (கலிங். 402). வடந்தை = வடக்கிலுள்ளது. வடந்தைத்தீ = வடவை. “சுடர்ந்தெரி வடந்தைத் தீயும்" (காஞ்சிப்பு. இருபத். 384). உத்தர மடங்கல் = வடவை (திவா.). உத்தரம் = வடக்கு. மடங்கல் = ஊழித்தீ.

உத்தரம் = வடக்கிலுள்ள ஊழித்தீ (பிங்.).

பண்டைத் தமிழர் சுற்றுக் கடலோடிகளா (circumnavigators) யிருந்தமையால், வடமுனையில் ஒரோவொருகால் தோன்றும்