பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

வடமொழி வரலாறு


வடவர் விக்ஷ்' என்பதை மூலமாகக் காட்டி, அதன் புணர்ப்புத் திரிபாக விட், விண் என இரு வடிவுகளைக் குறிப்பர்.

விள்-விக்ஷ் (மலம்). ஒ.நோ: உள்-உஷ், சுள்-சுஷ்.

விள்-விண். பிள்-விள். பிள்-(பிய்)-பீ. பிள்-பீள்-பீளை கண்மலம்.

விடி-வ்யுஷ்டி (இ.வே.)

வெள்-வெளு வெளுத்தல் = 1. வெண்மையாதல். 2. விடிதல். கிழக்கு வெளுத்தது (உ.வ.).

=

வெள்-வெளி. வெளித்தல் = 1. வெண்ணிறங் கொள்ளுதல்.

2.விடிதல்.

வெளி-வெடிஒ.நோ: வெளி-வெடி

களிறு-கடிறு, கெளிறு-கெடிறு.

=

திறந்தவெளி (பிங்.)

வெடிதல் = விடிதல். “என்றூழ் வெடியாத போதிற் கொய்தான்"

(செவ்வந்திப்பு, உறையூரழி. 47).

வெடி = விடிவெள்ளி (பிங்.). வெடியல்

விடிவு.

=

விடியல். வெடிவு

=

வெடி-விடி. விடிதல் = கதிரொளி தோன்றுதல்.

"வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே” (சீவக. 219). விடி = விடிகாலை.

“விடிபக லிரவென் றறிவரி தாய" (திவ். பெரிய. 4 : 10 : 8). விடி-விடியல். "வைகுறு விடியல் ” (தொல். பொருள். 8). “விடியல் வைகறை யிடூஉ மூர" (அகம். 196). விடி-விடிவு-விடிவை.

"விடிவை சங்கொலிக்கும்" (திவ். திருவாய். 6 : 1 : 9).

மா. வி. அ. அல்லது வடவர் காட்டும் மூலம் வருமாறு:

வ்யுஷ்' (ப்யுஷ்) = 1. எரி. 2. பிரி. 3. தள், வெளிவிடு.

=

வி+வஸ்' (ஒளிர்) = வ்யுஸ் (vy-us) = விடியல் (அ. வே.) = வ்யுஷி

(7ஆம் வேற்)-இ.வே.).

வ்யுஷித (7ஆம் வேற்.) = விடியல்.

வ்யுஷ்ட = விடிந்து. வ்யுஷ்டி = விடியல் (இ.வே.).

இதை நோக்கும்போது, விடி என்னும் சொல்லையே வ்யுஷ் என்று திரித்து அதற்கேற்ப இங்ஙனம் தித்திருக்குச் செய்திருக்கின் றனர் என்பது தெரிய வருகின்றது.

உள் (ஒள்) - உஷ் என்பது, முன்னரே உண்ணம் (உஷ்ண) என்னும் சொல்லின்கீழ்க் காட்டப்பெற்றது.