பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

viii. மணத்தல் (வாசனை வீசுதல்)

ஒரு பொருளின் நாற்றம் அதனை யடுத்த காற்றொடும் பிற பொருளொடும் கலத்தலால், அது மணம் என்னப்பட்டது.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுதல் காண்க.

குரு = மணம்.

"குரூஉப்புகை” = மணமுள்ள புகை (திவா.).

குள் -குரு. குருத்தல்

=

கலத்தல், தொகுதல். (குருவி) - கருவி =

தொகுதி.

"கருவி தொகுதி"

"கருவி வானம்

""

"கருவி வானம் என்புழிக் கருவி மின்னுமுழக்கு முதலாயவற்றது தொகுதி"

என்று சேனாவரையர் கூறியிருப்பது பொருந்தாது. "விலங்கிலை யெஃகின் மின்மயங்கு கருவிய"

என்றவிடத்தும்,

(தொல்.உரி.56)

(QUALIT GODT. 24)

(குறிஞ்சிப். 53)

"வேல்போல மின்னு மயங்குகின்ற தொகுதிகளை

யுடையவா-

என்றே பொருள்படும்.

""

கும் - கம் கம்-கம கம கமழ் கும்முதல் = கலத்தல், கூடுதல்.

குமுத்தல் = மணம் வீசுதல்.

"பசுமஞ்சள் குமுகுமுச்சு

குமுகுமு கமகம்

""

(நச். உரை)

குமு

(அழகர்கல. 10)

கம் என்று வாசனை அடிக்கிறது, கமகமவென்று கமழ்கிறது என்னும் வழக்குகளைக் காண்க.

குள் கள் (கடு) கடி -கள்

முள் - (மள்)

வாசனை.

(மண்) - மணம் = வாசனை. மணத்தல் = கலத்தல்.

முள் முரு - முருகு = வாசனை.

முரு - மரு = வாசனை. மருவுதல் = கலத்தல். = =