பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

ஒப்பியன் மொழிநூல் நாடு இந்தியாவினும் மிகுதியாகப் பொன்னும் பெருமுத்தும் விளைவது. தாப்பிரப்பனே இந்தியாவினின்றும், தமக் கிடையோடும் ஓர் ஆற்றினால் பிரிக்கப்படுகின்றது. அதன் ஒரு பாகம் இந்திய னங்களினும் மிகப் பெரிய காட்டுவிலங்குகளும் யானைகளும் நிறைந்தது; அடுத்த பாகம் மக்கள் வதிவது' என்று மெகஸ்தனிஸ் (Megasthenes) கூறுகிறார்.

""11

இக் கூற்று, அவர்தம் முன்னோர் கூறியதைக் கொண்டு கூறியதேயாகும். ஏனெனில், அவர் தென்னாட்டிற்கு வரவில்லை, அவர் கூற்றிலுள்ள சில குறிப்புகளால், இலங்கையின் வடபாகம் ஒருகாலத்தில் இந்தியாவொடு சேர்ந்திருந்ததென்றும், தாமிரபணி இலங்கையூடும் ஓடிற்றென்றும், அதனால் இலங்கை தாம்பிரபரணி (Taprobane)யெனப்பட்டதென்றும் அனுமானிக்க இடமுண்டு. ஆனால், தாமிரபரணியின் தெற்கிலு ள்ள தமிழ்நாட்டையே தாப்பிரப்பனேயென்றும், அதற்கு வடக்கிலுள்ள தமிழ்நாட்டை இந்தியாவென்று, பண்டை யவன சரித்திராசிரியர் கூறினர் என்று கொள்ளவும் இடமுண்டு. ஏனெனில், இத்தகைய மயக்குகள் யவனாசிரியர் குறிப்புகளில் பலவுள்ளன. அதோடு, தாப்பிரப்ப னேயிலுள்ளவாகக் நாட்டிலுமிருந்தன.

கூறப்பட்ட பொருளெல்லாம் பாண்டி

"வடநாட்டில், வடமொழியிற் பழமைகளை யெழுதிய நூலாசிரியர்கள், இலங்கை இப்போதிருப்பதைவிட மிகப் பெரிதாயிருந்ததாயும், விதப்பாக, மேற்கிலும் தெற்கிலும் மிக அகன்றிருந்ததாயும் கூறியிருக்கின்றனர். இக் கூற்று, புராண காலத்து உண்மையைக் கூறாவிடினும், இந்திய நாடுகளுக்குள் வழங்கிய ஒரு வழிமுறைச் செய்தியைக் குறிப்பிடுகின்ற தாயிருக்கின்றது.

"வடமொழி வானூலார் தங்கள் தலைமை உச்சகத்தை (Chief Me- ridian) இலங்கையில் வைத்தார்கள். ஆனால், அது இப்போதை லங்கைக்கு மேற்கிலுள்ள கோடாயிருந்தது. இக் குறிப்புக்கள் தான்முது காலத்தில் தென்னிந்தியாவும் மடகாஸ்கரும் இணைக்கப்பட்டிருந்தன வென்னும் கொள்கைக்குத் துணை செய்கின்றன... இலங்கை சிறிது சிறிதாய்க் கடலுண் மூழ்கிக் 11 Foreign Notices of South India, p. 41.