பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

127

தமிழ்நூல்களால் தெரியவருங் கடல்கோள்கள் மூன்று. அவற்றுள் முதலது மிக முக்கியமானது. ஏனெனில், அது ஒரு பெருநிலப் பரப்பின் அழிவாயும் அதன் கதை உலக முழுதும் வழங்குவதாயும், மக்கள் ஒருதாய் வயிற்றினரென்றும் மாந்தன் மாந்தன் பிறந்தகம் குமரிநாடென்றும் துணிவதற்குச் சான்றாயுமுள்ளன.

இம் முதற் கடல்கோளே நோவாவின் காலத்தில் நிகழ்ந்த வெள்ளமாகக் கிறித்தவ மறையிற் கூறப்படுவது. இது 'வெள்ளப் பழமை' (The Flood Legend) என்று ஆங்கிலத்தில் வழங்கும்.

"மேனாட்டார் இக் கதையை யூதரிடத்தினின்று, பழைய ஏற்பாட்டு வாயிலாய்த்தான் அறிந்தார்கள். ஆனாலும், இது யூதரிடத்து முதன்முதல் தோன்றவில்லை. யூதர் இக் கதையைப் பாபிலோனியரிடமிருந் தறிந்தார்கள். ஆனால், கில்கமேஷ் (Gilgamesh) என்னும் பாபிலோனியக் காதைநூலில் இது இணைக்கப்பட்டிருக்கிற முறையை நோக்கும்போது, இது பிற் காலச் செருக லென்றும், பாபிலோனியருக்கு மிக முற்பட்ட தென்றும் கருத இடமுண்டு."

வெள்ளக்கதை பாபிலோனில், அல்லது சேமிய வரணத் தாருக்குள் மட்டும் காணப்படுவதன்று, அதற்கு மாறாக, அது உலக விரிவானது. யூதர் நோவா வொருவனையே எஞ்சினோனாகக் கொண்டனர்; பாபிலோனியர் உத்தானபிஷ்திம் (Utanapishtim) என்பவனைக் கொண்டனர். கிரேக்கருக்குள், தியூக்கேலிய னையும் (Deucalion) அவன் மனைவி பைரா (Pyrrha)வையுங் காண்கின்றோம். மெக்ஸிகோவில், இருவேறு வரலாறுகள் உள. அவற்றுள் முந்தின நகுவாத்தல் (Nahuatl) கதை காக்ஸ் காக்ஸை (Cox cox)யும் அவன் மனைவி சொச்சிக்கு வெத்ஸலை (Xochliquetzal)யும் கூறுகின்றது; இன்னொன்று இவ் விருவரையும், முறையே, நத்தா (Nata) நானா (Nana) என்று கூறுகின்றது.

66

"இதோடு பெயர்வரிசை முடியவில்லை. உண்மையில் எல்லா மக்களுக்கும் இவ் வெள்ளத்தைப்பற்றி ஒவ்வொரு கதை யிருப்பதாகத் தெரிகிறது.”

"15

சீனப் பழமையில் ப்வோகி (Fohi)யும், கல்தேயப் பழமையில் சிசுத்துருசும் (Xisuthrus) நோவாவாகக் கூறப்படுகின்றனர்.

15 The Illustrated Weekly of India, August 6, 1939, p.73.