பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

ஒப்பியன் மொழிநூல்

4

"(எ-டு:) நாய் கவ்விற்று (கௌவிற்று என வராது)”± என்பது. இங்ஙனமே ஏனை மெய்கட்கும் அவர் காட்டுக் காண்பித் துள்ளார். இவ் வுரையும் பொருத்தமாகவே தோன்றுகின்றது.

பண்டைத

இக்காலத்துத் தமிழ்ப் பேராசிரியர் சிலர், தமிழிலக்கணங்க ளெல்லாம் செய்யுள் நடைமொழிக்கே ஏற் பட்டவை யென்றும், பண்டைத் தமிழிலக்கிய மெல்லாம் செய்யுள் நடையிலிருந்ததினால் அதிற் பல உலக வழக்குச் சொற்கள் இடம்பெறவில்லை யென்றும், அறியாது தொல்காப்பியரைக் கடக்கும் அல்லது தப்புவிக்கும் முகமாக, அவர் காலத்திற்குமுன் சகர முதற் சொற்களே தமிழில் இல்லையென்று தாம் மயங்குவதோடு தமிழ் மாணவரையும் மயக்கி வருகின்றனர். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலேயன்றி அகரமுதலி யன்று. ஆதலால், அதில் ஒரு சொல் இல்லாவிடின் அது தமிழிலேயே இல்லையென்பது, மொழியறிவும் உலக வழக்கறிவும் இன்மையையே காட்டும். சகர முதற்சொற்கள் இலக்கிய வழக்கில் மட்டு மன்றி உலக வழக்கிலும் ஏராளமாயுள்ளன. உலகவழக்குச் சொற்கள் தமிழுக்கு இன்றியமை யாதனவாகவும் அதன் சொல்வளத்தைக் காட்டுவனவாகவும் தொன்றுதொட்டு வழங்கி வருவனவாகவு மிருக்கின்றன. அவற்றுட் பல வருமாறு :

சக்கை, சகதி, சங்கு, சச்சரவு, சட்டம், சட்டி, சட்டுவம்,சட்டை, சடங்கு, சடலம், சடை, சடைவு, சண்டி, சண்டு, சண்டை, சண்ணு, சதரம் (உடம்பு), சதுப்பு, சதை, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பரம், சப்பனி, சப்பாணி, சம்பல்,சப்பு, சப்பை,சம்பளம், சம்பு, சம்பா, சம்மணம், சமம், சமர்த்து, சமை, சமையம், சரக்கு, சரடு, சரவடி, சரவை, சரகர், சரி, சருகு, சருவம், சல்லடை, சல்லி, சலங்கை, சலவன், சலவை, சலி, சலுகை, சவ்வு, சவத்தல், சவங்கல், சவட்டு (சவட்டி-சாட்டி), சவட்டை-சாட்டை, சவட்டு - சமட்டு -சமட்டி சம்மட்டி), சவடி, - சவம், சவர், சவலை, சவள், சவளம், சவளி, சவை, சழி, சள்ளை, சளி, சற்று, சறுகு - சறுக்கு, சன்னம்.

மேலும், தனித்தும் இரட்டியும் வரும் பல குறிப்புச் சொற்களும் சகர முதலவாய் உள.

ஈ-டு: சக்கு, சகசக, சட்டு, சடக்கு, சடசட, சடார், சதக்கு, சம், சர், சரசர, சரட்டு, சரேல், சல்சல், சலசல, சள், சள்சள், சளசள, சளப்பு, சளார், சறுக்கு.

4 செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 15, பரல் 2, பக். 67, 69.