பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

149

என்றார் தொல்காப்பியர். இதைப் பிரயோக விவேக நூலார் பற்றுக்கோடாகக் கொண்டு,

66

"இனித் தொல்காப்பியரும், தமிழில் 'எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே' என்றாராயினும், வடநூலில் எழுவாய் வேற்றுமை இவ்வாறிருக்குமென் றறிதற்கு, நும் என்னுமொரு பெயரை மாத்திரம் எழுவாய் வேற்றுமை யாக்காது பிராதிபதிகமாக்கி, பின்னர் நும்மை நுங்கண் என இரண்டு முதல் ஏழிறுதியும் வேறுபடுத்து வேற்றுமையாக்கினாற்போல, 'அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை' என்னுஞ் சூத்திர விதிகொண்டு நீயிரென வேறுபடுத்து, எழுவாய் வேற்றுமை யென்னும் பிரதமாவிபக்தியாக்குவர். இவ்வாறு நின், தன், தம், என், எம், நம் என்பனவற்றையும் பிராதிபதிகமாக்கி, பின் நீ, தான், தாம், யான், யாம், நாம் எனத் திரிந்தனவற்றை எழுவாய் வேற்றுமை யாக்காமையாலும், 'எல்லா நீயிர் நீ' எ-ம், 'நீயிர் நீயென வரூஉங் கிளவி' எ -ம், பெயரியலுள் பெயர்ப் பிராதிபதிக மாகச் சூத்திரஞ் செய்தலானும், 'அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை' என்னுஞ் சூத்திரத்தை வடமொழிக்கு எழுவாய் வேற்றுமை இவ்வாறிருக்குமென்று தமிழ்நூலால் அறிதற்கே செய்தாரென்க. நிலைமொழி விகாரமொழி எட்டாம் வேற்றுமையானாற்போல நும்மென்னு நிலைமொழி விகாரம் முதல் வேற்றுமையாமென்க” எனக் கூறியுள்ளார்.(பிரயோக விவேகம், நூ. 7, உரை)

பார்ப்பனர் தமிழின் இயல்பை அறியாமைக்கு, அல்லது தமிழை வடமொழி வழித்தாகக் காட்டச் செய்துவரும் முயற்சிக்கு, இப் பிரயோக விவேகக் கூற்று ஒரு நல்ல காட்டாகும்.

இலக்கணக்கொத்தின் ஆசிரியராகிய சுவாமிநாத தேசிகர்,

66

விகாரப் பெயரே

பெயர்ப்பின் விகுதி பெறுதலே யாயவன்

அனவன் ஆவான் ஆகின் றவன்முத

லைம்பாற் சொல்லும் பெயர்ப்பி னடைதலே

யுருபென வெவ்வே றுரைத்தார் பலரே"

என்று நூற்பா வியற்றி,

"தன், தம், நம், என், எம், நின், நும் என்னுந்

திரிபில்

பெயர்கள் உருபுகளையும், உருபோடு வருமொழிகளையும், உருபின்றி