பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

165

தலின், அவை ஐந்தெனப்படும்” என்றும் தமிழ்முறைக்கு மாறாக உரை கூறினார்.

இவ் வுரை தவறென்பதற்குக் காரணங்களாவன :

(1) தமிழ்முறைக்கு மாறானமை.

இதை, நச்சினார்க்கினியரே, "இங்ஙனம் ஐந்திணைப் பகுதியும் பாங்கனிமித்தமாங்கால் வேறுபடுமெனவே, புலனெறி வழக்கிற்பட்ட இருவகைக் கைகோளும்போலா இவை யென் பதூஉ ... இவ்வாற்றான் எண்வகை மணனும் உடனோதவே, இவையும் ஒழிந்த எழுவகை மணனும்போல அகப்புறமெனப் படுமென்பதூஉங் கொள்க,” என்று 13ஆம் நூற்பாவுரையில் கூறியிருப்பதா லறியலாம்.

(2) ஆரிய மணமுறையைத் தமிழ மணமுறையொடு கலத்தல்.

களவியல் முதல் நூற்பாவில் ஆசிரியர் தமிழர் கைகோ ளாகிய களவொழுக்கத்தை, ஆரிய மணமாகிய கந்தருவத்தொடு (ஒருசார் ஒப்புமைபற்றி) ஒப்பிட்டுக் கூறினரேயன்றி, ஆரிய மணமுறைக்கு இலக்கணங் கூறிற்றிலர்.

தொல்காப்பியத்தில் ஆங்காங்கு ஒருசில வடசொற்கள் அமைந்திருக்கலாம்; சில ஆரிய வழக்கங்களும் குறிக்கப்படலாம்.

ஆனால், இலக்கணங் கூறுவதுமட்டும் தமிழ் எழுத்துச்

சொற்பொருள்கட்கும், தமிழ வழக்கங்கட்குமே என்பதை மறத்தல்

கூடாது.

(3) முறைமாற்று.

ஆரிய மணங்கள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், அசுரம், இராக்கதம், பைசாசம், கந்தருவம் என்னும் முறையிலமைந் திருக்கவும், இவற்றுள் முன்னைய நான்கையும் பின்னர் நான்கென்றும் ஈற்றயல் மூன்றையும் முன்னைய மூன்றென்றும் முறைபிறழக் கூறினார் நச்சினார்க்கினியர்.

(4) தமிழ மணத்திற்கும் ஆரிய மணத்திற்கும் இசைவின்மை.

66

இதை, 'இதற்கு முன்நின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமும் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனும்,